Posts

Showing posts with the label கடவுளைத் தேட உகந்த காலம் எது-காளமேகம் டுரை

கடவுளைத் தேட உகந்த காலம் எது

கடவுளைத் தேட உகந்த காலம் எது "இறைவனை தொழுவதற்கு உகந்த  நேரம் எது? "என்று பாலன் தன் தன் நண்பர் மதிவண்ணனிடம் கேட்டார். "அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத் தொழுவதற்கு உகந்த நேரம் "என்று  பதிலளித்தார் நண்பர். "அமைதியான அந்தக் காலைப் பொழுதில்தான் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும் இல்லாத அமைதியானச் சூழல் பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான். ஆனால் என்னால் அது முடிவதில்லையே" என்றார் பாலன். "நீர் சொல்லுவதும் சரிதான். வேலை வேலை என்று சதா கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறோம். கடவுளைத் தொழ நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது" புலம்பினார் மதிவண்ணன்.  இவர்களைப் போன்றுதான் இன்றைய அவசர உலகில் எதற்குமே நேரம் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.    இறைவனைத் தொழுவதற்கு கால நேரம் எதற்கு? எந்த நேரத்திலும் தொழலாம். எங்கும் தொழலாம். கிடக்கிற நேரத்தில்  இருக்கிற இடத்திலிருந்து தொழலாம். ஆனால் எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.   அதற்கான இடமுண்டு. சரியான நேரமும் உண்டு என்று நம்புகின்றனர்.அவர்கள...