நறுந்தொகை கூறும் அழகு
நறுந்தொகை கூறும் அழகு அழகு என்பது ஒரு புலனுணர்வு அனுபவம். அழகு எது என்பதைத் தீர்மானிப்பதில் ஆளுக்கு ஆள் வேறுபாடு இருக்கும். தோற்றம் மட்டும் அழகாகிவிடாது. ஒவ்வொருவரின் செயல்களும் அதை அவர் செயல்படுத்தும் முறையும் அழகாகாகத் தீர்மானிக்கப்படும். எப்படி எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இல்லையோ ஒரே தொழிலைச் செய்யவில்லையோ அதற்கேற்றாற்போல அழகும் அவரவர்க்கேற்ப மாறுபடும். அவரவர்க்கான வழியில் அவரவர் பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் பயணித்தால் ஒவ்வொருவருமே அழகுதான். இதோ யார் யாருக்கு எவை எவை அழகு என்று அருமையாக சொல்லிச் சென்றிருக்கிறார் அதிவீரராம பாண்டியர். வாருங்கள் . பாடல் வரிகள் உங்களுக்காக 1. கல்விக்கு அழகு கசடற மொழிதல் தவறின்றித் தெளிவாக உரைக்கும் திறன் பெற்றிருத்தல் கல்விக்கு அழகு 2. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் இடர்படும் காலத்து தம் உறவினர்க்குக் கைகொடுத்து உதவுதல் செல்வர்க்கு அழகு 3. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் தாம் கற்ற வேதத்தை மக்களின் நன்மைக்காக ஓதுவதோடு ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழ்தல் வேதியர்க்கு அழகு. 4. மன்னர்க்கு அழகு...