பீனிக்ஸ் பறவை
பீனிக்ஸ் பறவை பீனிக்ஸ் பறவை என்று ஒரு பறவை உண்டா? பீனிக்ஸ் பறவை பற்றிய கதைகள் யாவும் உண்மையா? பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்து எழும்பி புதிதாய் பிறக்குமாமே! உண்மையா? இப்படி மனதிற்குள் எத்தனை... எத்தனையோ கேள்விகள். பீனிக்ஸ் பறவை பற்றி பண்டைய கிரேக்க, ரோமானிய புராணக் கதைகளில் தகவல்கள் காணப்படுகின்றன. அரேபிய ,கிறிஸ்தவ கதைகளிலும் பீனிக்ஸ் பற்றிய குறிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. சீனாவிலும் பீனிக்ஸ் பறவை இருந்ததாகவும் அது பாம்பைப் பார்த்தால் தனது சிறகை விரித்து கால் நகங்களால் தாக்கும் ஆற்றல் மிக்கது என்றும் கூறுவர். பீனிக்ஸ் பறவையை செந்தூரமும் தங்க நிறமுமான இறகுகளைக் கொண்டதாகவே உருவகப்படுத்தி நம் மனதில் பதிய வைத்துள்ளனர். நமக்குக் கிடைத்த எல்லா குறிப்புகளும் பீனிக்ஸ் பறவையை நெருப்புடன் தொடர்புபடுத்திப் பேசும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்துப் போவதாக உள்ளன...