Posts

Showing posts with the label மகாராஷ்டிரா நாள் -கட்டுரை

மகாராஷ்டிரா நாள்

மகாராஷ்டிரா நாள்  மே ஒன்று மகாராஷ்டிரா நாள். மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு  அருமையான மாநிலம். மகாராஷ்டிரம் என்றதும் அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது பொருளாதாரத் தலைநகரான மும்பை என்றால் மிகையாகாது. வந்தோருக்கெல்லாம் வாழ்வளிக்கும் தமிழகம் போல வந்தோர்க்கெல்லாம் வாழ்வளிக்கும்  தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் தொழில் முனைவோர்கள் பெருமளவில் நிறைந்த மாநிலம். தொழில் வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. படித்தவர்களுக்கு மட்டுமல்ல படியாதோரையும் பசியாற வைக்கும் பன்முகத் தன்மை கொண்டது. மொழியறியா மக்களும்  பசியாற்றிக் கொள்ள தொழில்கள் ஏராளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 1960ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இது பம்பாய் மாகாணமாகவே இருந்து வந்தது.   மாநில மறு சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மராட்டி மற்றும் கொங்கணி மொழி பெரும்பான்மையாகப்  பேசும் மக்கள் உள்ள  பகுதிகள் மகாராஷ்டிரம் என்றும் குஜராத்தி மொழி  பெரும்பான்மையாகப் பேசும் மக்கள் உள்ள  பகுதி குஜராத் என்ற...