நம்பிக்கை தரும் முதலடி
நம்பிக்கை தரும் முதலடி ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்" என்பார் வள்ளுவர். "ஒருவர் தனக்கு இயலும் செயலையும் அதைப்பற்றிய அறிவையும் பெற்று தன்னம்பிக்கையோடு உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது என்று எதுவும் இருக்க முடியாது" " தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது" என்பார் மாவீரன் நெப்போலியன். எவ்வளவு தன்னம்பிக்கை தரும் வரிகள் பாருங்கள். தோல்வி துரத்தட்டும். தோல்வி என் பின்னால் தானே வருகிறது. நான் பிடிகொடுக்காமல் ஓடிக்கொண்டே இருப்பேன். எனது பயணம் முன்னோக்கி மட்டுமே இருக்கும். எந்தச் சூழலிலும் நான்தோல்வியைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. கண்ணுக்கு எட்டும் தூரத்தில்தான் வெற்றி இருக்கிறது என்று முன்னோக்கி மட்டுமே பார்க்க வேண்டும். இதற்கு மிக உறுதியான மனநிலை வேண்டும். முதலாவது நம்மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வெற்றி காண ம...