Posts

Showing posts from February, 2023

பணி நிறைவுப் பாராட்டு மடல்

Image
                  பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி . வசந்தி தேவராஜன் B.Sc,B.Ed,        த. தா. காய்க்வாட் தமிழ்ப் பள்ளி ,        மும்பை - 37                                                                                               பணி ஓய்வு நாள்: 01.03.2023 புகழ் மண்டிக் கிடக்கும் திண்டிவனத்தேன் வேணுகோபால் சகுந்தலா இணையர் தேன் மடியில் விழுந்த கன்னித்தேன் வசந்தத்தேன் மன்னர் தேவராஜனுக்கு வாய்த்த நல்கட்டித்தேன்! மக்கள் இருவர் அழகுத்தேன் அமுதத்தேன் கூட்டுத்தேன் சுவை கூட்டுத்தேனென உரைத்தேன் பணித்தேன் என்பதை உம்மிடம் படித்தேன் பண்புத்தேன்  பணிவுத்தேன் உம்மில் கற்றேன்! அறிவியல் பணிமனையில் உம்பணி கண்டேன் கண்கள் பனித்தேன் இமைப்பதைத் துறந்தேன் கலைத்தேன் க...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து வானிலவோ  தாரகையோ வாசம்தரு தேன்மலரோ - கோல்டா சில்லென்று சிரித்த நாள் சீர்மிகு பிறந்தநாள் ஆனதுவோ ஆராரோ வாழ்த்த அகவைநாள்  அளவில்லா அகமகிழ் தந்ததுவோ! கட்செவியேறி  காதோரம் கவியோதி கரமதில் மலர்தனைத் தந்து பாட்டியுனைச் சீராட்டுகிறேன் கலை பல கற்று விருதுகள் சுமந்து விஞ்சும் மதி யுண்டு மிஞ்சும் மகிழ் வுண்டு கொஞ்சும் நலம் பூண்டு நெஞ்சம் விழைவன கண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு   வாழ்க! வாழும் பரம்பரையெனும் நற்பெயர் கொண்டு!  

கடலோடா கால்வல் நெடுந்தேர்.....

Image
கடலோடா கால்வல் நெடுந்தேர்..... கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து"                       குறள் : 496 கடலோடா - கடலில் ஓடாது கால்வெல் - வலிமையான சக்கரம் நெடுந்தேர் - உயரமான தேர் கடலோடும்- கடலில் ஓடும் நாவாயும் - கப்பலும் ஓடா - ஓடாது நிலத்து - நிலத்தின் மீது பெரிய சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓடாது.கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓட முடியாது. விளக்கம்: பகைவர்களை  வெல்ல வேண்டும் என்றால் இடமறிந்து செயல்படத் தெரிந்திருக்க வேண்டும். ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து ,அந்த இடத்திலிருந்து ஒரு செயலைச் செய்தால் மட்டுமே  நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எங்கே ?எதனை ?எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்து செயல்படுபவர்களுக்கு எளிதாக வெற்றி கிட்டும்.  நிலத்தில் கப்பல் விடுவேன்  என்றால் கூடுமா? அதுபோல கடலில் தேரே இழுத்துச் செல்வேன் என்றால் இயலக்கூடிய செயலாகுமா? தேர் என்றால் நிலத்தில்தான் செல்லும். கப்பல் என்றால் கடலில் தான் ஓடும். இடமறிந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது . அதுதான் ஒரு மன்னனுக்கு வெற்...

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா...

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா.... " கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் நம்மோடு கூடுதல் கோடி பெறும்" என்று நான்கு கோடிப் பாடலைப்  பாடிய பெருமிதத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தார் ஔவை. அப்போது இரண்டு பேர்  வயதில் நீர்ப் பாய்ச்சுவதற்காகச் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் வேறு யாருமல்லர். உடன்பிறந்த அண்ணன் தம்பிகள்தான். அதைப் பார்த்த ஔவையின் நினைவுகளில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே துணியை மாற்றிமாற்றி உடுத்து என்று  எனக்கானது உனக்கானது  என்று எதையும் பிரித்துப் பார்க்காது வாழ்ந்த உடன்பிறப்புகள் இன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. எங்கோ பிறந்தவர்கள்  நட்பு என்ற பெயரில் துன்ப காலத்தில் தோள்கொடுத்து நிற்கின்றனர். இவை எல்லாம் எதனால்? சுயநலம் பெருகும்போது உறவுகள் காணாமல் போய்விடுகின்றன. அன்பு வறண்டு போகிறது. மனித நேயமும் அன்பும் நிறைந்திருக்கும் இடத்தில் கருணை துளிர்த்தது. கண்டவர் யாவரும்  நம்மவர்களாகக் கண்ணுக்குத் தெரிகிறார். காலம் செய்யும் கோலங்கள். காட்சியாய் கண் கண்முன் விரிகின்றன. பாடல் நமக்கு வந்து கிடைக்கிறது. இதோ ...

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

Image
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?   "சோழியன் குடுமி சும்மா ஆடுமா? " இந்தப் பழமொழியைக் கேட்டதும் குடுமி வைத்த ஆட்கள் கண்முன்  வந்து குடுமியை ஆட்டிக்கொண்டு  நிற்பர். அவர்கள் நடக்கும்போதும் பேசும்போதும் குடுமி  ஆடிக் காட்டும்.  அந்த ஆட்டத்திற்கும்  அவருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது போலத் தோன்றும். அது பேசுகிறவர்கள் அது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால்தான் இப்படியொரு பழமொழி சொல்லப்பட்டிருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள். ஒருவேளை அப்படியும் இருக்குமோ? அதுதான் இல்லை. நாம் இன்று பயன்படுத்தும் இந்தப் பழமொழிக்கும்  சோழியன் குடுமியை ஆட்டுவதற்கும்  சம்பந்தமே இல்லையாம். சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை  எடுத்து வந்து எப்படி பழமொழியாகப் பயன்படுத்த முடியும்? ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒத்துக்கொள்ளும்படியாக ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம்   ஒரு பயன் கருதி ஒரு பொருளை விளங்க வைக்கப் சொல்லப்படுவதுதான் பழமொழி . நம்மோடு நெருங்கிப் பழகுபவர்களைப் பார்த்து கிண்டலாகப் பேசுவதற்காக ஒருவேளை இந்தப் பழமொழி வந்திருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணம்...

புலிகிடந்த தூறாய் விடும்

Image
 புலிகிடந்த தூறாய் விடும்  " மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்" என்பார் வள்ளுவர். மனைவி மாண்புடையவளாக இருத்தல் வேண்டும். நற்பண்பு இல்லாத மனைவி வாய்த்தால் .... அவ்வளவுதான். குடும்பம் குடும்பமாக இராது. எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனைவி வீட்டில் இருந்தால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? செல்வமும் புகழும் இருந்து  என்ன பயன்? வீட்டில் அமைதி இல்லையே! எல்லாம் இருந்தும் அமைதி  இல்லை என்றால்  ஒன்றுமில்லாது போன்ற   வெறுமையைத்தான் உணர முடியும்.    வெளியில் சென்ற கணவனுக்கு   வீடு திரும்ப  மனம் வராது.  மனைவியோடு பேசவே அச்சம் ஏற்படும்.  எந்த நேரத்தில்   சண்டையிட்டுக் கொள்வாளோ   என்ற அச்சத்தோடே   வாழ்க்கை நடத்த  வேண்டியிருக்கும்.   " புகழ்புரிந்த இல்லில்லோர்க்கு இல்லை இகழ்வார்முன்  ஏறு போல் பீடு நடை  " பீடு நடைஎப்போது வரும்? பணத்தால் வருமா? பதவியால் வருமா? புகழால் வருமா? இல்லை. நமது புகழைக் காக்க விரும்பும் மனைவி அமைந்தால் மட்டுமே ஏற...

இணரூழ்ந்தும் நாறா மலரனையர்

இணரூழ்ந்தும் நாறா மலரனையர்.... இணரூழ்ந்தும் நாறா மலரனையர் கற்றது  உணர விரித்துரையா தார்"                   குறள் : 650 இணர் - கொத்தாக ஊழ்ந்தும் - மலர்ந்திருந்தும்  நாறா - மணம் தராத மலர் - பூ அனையர் - ஒத்திருப்பர் கற்றது - கற்ற நூல் உணர - பிறர் அறியும்படியாக விரித்து - தெளிவாக உரையாதார்- உரைக்க இயலாதவர் கற்றதை பிறர் உணர  விளக்கிச் சொல்ல இயலாதவர் கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவராவார். விளக்கம்: பூக்கள் கொத்தாக மலர்ந்திருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாறா மலர் கண்டு பாராமுகமாகச் செல்வதுதான் மனித இயல்பு. ஏன் வண்டுகள்கூட மணம் இருக்கும் பூக்களைத் தான் நாடி வரும். பூக்கள் என்றால் அதில் மணம் இருக்க வேண்டும். மணம்தான் பூக்களுக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வண்ணம் பார்க்கக் கவர்ச்சிகரமாக இருக்கலாம். அது பிறரால் விரும்பப் பட மாட்டாது. அதுபோல கற்றவர் என்றால் தாம் கற்ற நூலின் பொருளை பிறர் முன் எடுத்துச் சொல்லும் திறன்  பெற்றிருக்க வேண்டும். தாம் கற்றதைப் பிறர் அறிய விரித்துச் சொல்ல இயலாது போனால் அவர் பெற்...

உன்னை நம்பு

உன்னை நம்பு போராட வந்த பின்னர் புறமுதுகிட்டு ஓடடலாமா? கழனியில் இறங்கிய பின்னர் சகதியாகிறது என்று காலைத் தூக்கலாமா?  இருட்டினில் நடக்கும்போது கால் ஒலி கேட்கத்தான் செய்யும். மழையில் நடக்கும்போது குடை பிடித்தாலும்  கால் நினையத்தான் செய்யும். கால் நனைகிறதே என்றால் வெளியில் செல்வதெப்போது? கரை சேருவோம் என்ற  நம்பிக்கையில்தான் கப்பலில் ஏறுகிறோம். கடலில் கப்பல் கவிழ்ந்து விடுமோ என்ற ஐயம் எழுந்தால் காலத்திற்கும் கப்பலில் கால் வைக்க முடியுமா? பறந்தால் கீழே விழுந்துவிடுவோம் என்று எண்ணியிருந்தால்  பறவைகளால் பறக்கத்தான் முடியுமா? சிறகுகளின் மேல் நம்பிக்கை  வைத்திருப்பதால்தான் பறவைகளால்  நீள்கடலையும் நெடுமலையையும்  கடந்து வர முடிகிறது.   நேற்று அடித்த சூறாவளியில் அலறிய கொப்புகளையும் விட்டுவிடாமல் அரவணைத்து இன்றும் நின்று கொண்டிருக்கும் வலிமை மரங்களுக்கு எங்கிருந்து வந்தது ? யார் கொடுத்தது? அட போய்யா... நீ என்னை ஒடிக்கவும் முடியாது. பெயர்க்கவும் முடியாது. எனக்கு என் வேர்களின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று புயலுக்கே சவால் விட்டு இன்றுவரை நின்று கொண்டிருக்கும்...

தத்தம் விதியின் பயனே பயன்

தத்தம் விதியின் பயனே பயன்  ஏகன் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தான்.அவனுக்கு வள்ளி என்று ஓர் அருமையான  மனைவி வாய்த்திருந்தாள். வாய்க்கு ருசியாக வகைவகையாக உணவு சமைத்துக் கொடுப்பாள். ஏகன் வயலிலிருந்து வருவதற்கு முன்னர் சமைத்து வைத்துவிட்டு வீட்டுத் திண்ணையிலேயே ஏகன் வருகைக்காகக் காத்திருப்பாள். ஒருநாள் ஏகன் வரகு சோறு சமைத்து வைக்கும்படி சொல்லி விட்டுச் சென்றான். வள்ளியும் ஏகன் சொல்லியது போல வரகு சோறும் கறியும் சமைத்தாள். சமையல் முடிந்ததும் ருசி பார்ப்பதற்காக சிறிது வரகு சோறும் கறியும் ஊற்றி சாப்பிட்டுப் பார்த்தாள். அடடா....என்ன பிரமாதம்! என்றுமில்லாத படி இன்று உணவு இவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்று மறுபடியும் எடுத்து சாப்பிட்டாள். இன்னும் ஆசை தீர்ந்தபாடில்லை. உணவின் சுவை இன்னும் கொஞ்சம் சாப்பிடு...இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று சுண்டி இழுத்தது. அந்த ஈர்ப்பில் மறுபடியும் மறுபடியும் சாப்பிட்டு பானையில் இருந்த மொத்த சோற்றையும் சாப்பிட்டு முடித்து விட்டாள் வள்ளி. உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டல்லவா? வள்ளியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? அப்படியே தூங்கிவி...

என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால்?

என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால்? " கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று சொல்லித் தந்த ஔவைக்கு அத்தோடு நம்மை விட்டுவிட மனமில்லை. சங்கு எத்தனை பேருக்குத்  தெரியுமோ என்ற ஐயம் ஔவையின்  மனதில் எழுந்தது.  தெரிந்தவர்கள் நான் சொன்ன  உவமை மூலம் சொல்ல வந்த  கருத்தைப் புரிந்திருப்பார்கள். தெரியாதவர்களுக்கு   புரிய வைக்க வேண்டுமே!  அதற்கு என்ன செய்வது?  எல்லாருக்கும் புரியும்படியான  இன்னொரு பொருளைக் கையிலெடுத்து  விளங்கும்படியாகச் சொல்லி வைப்போம்.  அப்படியாவது புரிகிறதா என்று  பார்ப்போம் என்று நினைத்தார்   ஔவை.    நாமும் பல நேரங்களில்   புரிந்து போல தலையை ஆட்டுவோம்.  ஆனால் புரிந்திருக்காது.  சரி போகட்டும் என்று அப்படியே கடந்து  போய்விடுவோம்.    திரும்பத்திரும்ப சொல்லித்தரும் போதுதான் புரிந்து கொள்வோம். அல்லது சில நேரங்களில் வாசித்த மறுநிமிடமே மறந்துவிட்டு கண்டும் காணாமல் போய்விடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக தெரிந்த உவமைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கு...

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்....

யாதெனின் நீங்கியான் நோதல்.... " யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் "           குறள் : 341 யாதெனின் யாதெனின் -யாதானுமொரு பொருளின்மேல் நீக்கியான்- விருப்பு கொள்ளாதிருப்பவன் நோதல்- வருந்துதல் அதனின்  அதனின்- அந்தப் பொருளின்மூலமாக இலன் - இருக்கப் போவதில்லை ஒருவன் எந்தப் பொருளின்மேல் விருப்பம் இல்லாதிருக்கிறானோ  அந்தப் பொருளால் அவனுக்குத் துன்பம் ஏற்படப் போவதில்லை. விளக்கம் : ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். ஒரு பொருளின் மீது அதிக ஆசை வைத்திருந்தால் அந்தப் பொருள் கிடைக்காவிட்டால் மனம் சஞ்சலப்படும். அந்தப் பொருளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நாட்டத்தால்  வேறு எந்த சிந்தனையும் எழாது. யாரைப் பற்றியும் நினைக்கத் தோன்றாது. நம்மை வருத்தியாவது அதனைப் பெற்றுவிட வேண்டும் என்ற முயற்சி மட்டுமே முன்னால் வந்து நிற்கும். அந்தப் பொருளுக்கான தேடலில் இடையில் பல இன்னல்கள் ஏற்படலாம். அதுவே அப்படிப்பட்ட ஓர் ஆசை இல்லாமல் இருந்திருந்தால்....? எந்தக் கேடும் விளையப் போவதில்லை. அதனால்தான்...

அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல....

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல " கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார்  தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று கோடியை அள்ளி விட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார் ஔவை. ஔவை இப்படிச் சொல்லி விட்டாரே என்று நமக்கும் உறவுகளோடு  ஒட்டி வாழ ஆசைதான். ஆனால் எப்படித்தான் ஒட்டநினைத்தாலும் தாமரை இலை மேல் நீர் போல  ஒட்ட மறுப்பவர்களை என்ன செய்வது? அப்படி ஒட்ட மறுப்பதற்குக் காரணம்? உங்கள் குணமா? அல்லது உங்களிடம் இல்லாத பணமா? என்று சிந்தித்துப் பார்த்தால் இந்த விலகலுக்குக் காரணம் பணமாகத்தான் இருக்கும். " பணம் இருப்பவன் பின்னால் பத்துப்பேர் பதவி இருப்பவன் பின்னாலும் பத்துப்பேர் "என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பத்துப்பேர் யார் யார்? என்று பட்டியலிட்டுப் பாருங்கள். அதில்  உறவுகளும் இருக்கும். உங்களிடம் பொருள்  இல்லாதபோது உறவுகள் உறவினர்  என்று சொல்லிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். இதுதான் எதார்த்தம். ஒன்றிரண்டு உறவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கலாம் . மற்றபடி பெரும்பான்மை பணத்தின் பக்கம்தான் நிற்கும். ஒட்டி நின்று நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வர். அதனால்தான் ...

வாடி இருக்குமாம் கொக்கு

வாடி இருக்குமாம் கொக்கு  மௌனம் ஓர் அழகான மொழி என்று சொல்வார்கள். மௌனம் வார்த்தையால் பேசாது. பேசப்பட வைக்கும். எல்லாராலும் அமைதியாகவும் மௌனமாகவும் இருந்துவிட முடியாது. அது பெரியோருக்கும் மகான்களுக்கும் மட்டுமே சாத்தியப்படும். அமைதியாக இருப்பது கூட அறிவுள்ள ஒருவர்க்கு மட்டுமே  இயலக்கூடிய ஒன்று. ஆழ்கடல் அமைதியாக இருக்கும். அமைதியாக இருக்கும் ஒருவரை அலட்சியமாக எண்ணிவிட வேண்டாம். அடக்கமாக இருப்பதால் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போய்விடுவார் என்று  தவறாக எண்ணிவிடவும் வேண்டாம். அந்த அமைதிக்கும் அடக்கத்திற்கும் காரணம் தேவையில்லாத இடத்தில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். சாதகமான சூழலுக்காகக்  காத்திருப்பதற்காகவும் இருக்கலாம். சாதகமான சூழல் என்றதும்  ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குதான் கண்முன் வந்து நிற்கிறது. கொக்கு ஒருபோதும் மற்ற  பறவைகளைப் போன்று பரபரப்பாக சுற்றிக்கொண்டு திரியாது. வயலோரமாகவோ குளத்தோரமாகவோ  ஒன்றுமே தெரியாதது போல ஒற்றைக்காலில் நின்று  கொண்டிருக்கும். எதிலும் கவனம் செலுத்தாதது போலவே நின்றிருப்பதால் மீன்குஞ்சுகள் கொக்கின் கண்  முன்ன...

கடலோடா கால்வல் நெடுந்தேர்...

Image
கடலோடா கால்வல் நெடுந்தேர்.... கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து"                       குறள் : 496 கடலோடா - கடலில் ஓடாது கால்வல் - வலிமையான சக்கரம் நெடுந்தேர் - உயரமான தேர் கடலோடும்- கடலில் ஓடும் நாவாயும் - கப்பலும் ஓடா - ஓடாது நிலத்து - நிலத்தின் மீது பெரிய சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓடாது.கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓட முடியாது. விளக்கம்: பகைவர்களை  வெல்ல வேண்டும் என்றால் இடமறிந்து செயல்படத் தெரிந்திருக்க வேண்டும். ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து ,அந்த இடத்திலிருந்து ஒரு செயலைச் செய்தால் மட்டுமே  நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எங்கே ?எதனை ?எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்து செயல்படுபவர்களுக்கு எளிதாக வெற்றி கிட்டும்.  நிலத்தில் கப்பல் விடுவேன்  என்றால் கூடுமா? அதுபோல கடலில் தேரே இழுத்துச் செல்வேன் என்றால் இயலக்கூடிய செயலாகுமா? தேர் என்றால் நிலத்தில்தான் செல்லும். கப்பல் என்றால் கடலில் தான் செல்லும். இடமறிந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது . அதுதான் ஒரு மன்னனுக்கு வெற்...

கல்லின் மேலிட்ட கலம்

கல்லின் மேலிட்ட கலம் உதவி  யாருக்கும் செய்கிறோம்.? எதற்காகச் செய்கிறோம்? என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம்? என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் அதன் பெருமை இருக்கிறது. நாலுபேர் மெச்ச வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் உதவியால் எந்தப் பயனும் இல்லை. உதவியின் அருமை தெரியாத ஒருவர்க்கு நாம் செய்யும் உதவியாலும் எந்தப் பயனில்லை. எந்த நேரத்தில் ...எதற்காக உதவி செய்யப்பட்டது என்பதை அறிந்து காலமெல்லாம் நன்றியுடையவராக இருக்கும்  ஒருவர்க்குச் செய்யும் உதவிதான் பெருமைமிக்கது. உதவிக்கான  மரியாதையைப் பெற்றுத்தருவது. அல்லாத அதாவது என்ன பெரிய உதவி செய்துவிட்டார்? நானும்தான் அதற்கு ஈடாக  ஏதோ செய்திருக்கிறேன் என்று சொல்லும் ஒருவர்க்கு நாம் உதவி செய்திருப்போமானால் அது அந்த உதவிக்கான மரியாதையே இல்லாமல் செய்துவிடும். தகுதி இல்லாத ஒருவருக்கு உதவி செய்யாதிருங்கள். அதனால்தான் வள்ளுவர் , உதவி வரைத்தன்று உதவி உதவி  செய்யப்பட்டார் சால்பின் வரைத்து" என்று சொல்லியிருக்கிறார். உதவி செய்யப்படும் அளவைப் பொறுத்துச் சிறப்படைவதில்லை. நம்மிடமிருந்து உதவிபெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் சிறப்பு இருக்கும...

கல்லாதான் கற்ற கவி

கல்லாதான் கற்ற கவி  போலச் செய்தல் சிறுபிள்ளகள் செய்யும் செயல். நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே  செய்து காட்ட நினைப்பது குழந்தைகளின் இயல்பு. அது வேடிக்கையாக இருக்கும். அதுதான் அவர்களுக்குப்  படிப்பினையாகவும் இருக்கும். அதுபோல நாமும் பிறரைப் போல நடக்க வேண்டும் என்று முயற்சிப்போம். அது நல்லதா கெட்டதா என்பது செய்யும் செயலைப் பொறுத்தே அமையும். எல்லா இடங்களிலும் இந்தப் போலச் செய்தல் எடுபடாது. ஒவ்வாத ஒரு செயலை  பிறரைப் போல செய்ய நினைத்தால் பிறருடைய பார்வைக்கு அது  நகைச்சுவையாகதான் இருக்கும். எப்போதுமே நாம் நாமாக இருப்பதுதான் நல்லது.  அப்போதுதான் நம் தனித்தன்மை வெளிப்படும். ஒரு பேச்சாளர் இன்னொரு பேச்சாளர் போல பேச நினைத்தால் அவர் தோற்றுத்தான்  போவார். நமது எழுத்தோ அல்லது பேச்சோ  யாரைப் போன்றும் இருக்கக் கூடாது. அவரைப்போல் இவரைப் போல் என்று ஒன்றிரண்டு படித்து வைத்துவிட்டுச் பேசவோ எழுதவோ  நினைத்தால் நாம் எழுத்தாளராகவோ  பேச்சாளராகவோ நம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. இசையமைப்பாளரும் இன்னொரு இசையமைப்பாளரைப்போல இசையமைத்தால் எத்தனை நாளைக்குத்தான் அ...

கவையாகிக் கொம்பாகி....

" கவையாகிக் கொம்பாகி.... " நெட்டை மரங்களென நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத்  துணையாமோ" என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் ஒரு கேள்வையைக் கடுமையாகப் கேட்டிருப்பார். பாஞ்சாலிக்கு நிகழ்ந்த கொடுமையைப் பார்த்திருந்தும் எதிர்வினையாற்றத் திராணியில்லாது நின்றிருந்த மனிதர்கள்மீது வீசப்பட்ட  விமர்சனம் இது. நீங்கள் எல்லாம் மரங்கள் . மரங்கள் நெடுநெடுவன வளர்ந்திருந்தாலும் ஒரு பார்வையாளனாக நிற்குமே தவிர எதிர்வினையாற்றத் தெரியாது. அதனால்தான் அவர்களைப் பார்த்து மரம் என்றார் பாரதி. ஆனால் இன்னொருவர் சபையில் சும்மா நிற்பவர்களைப் பார்த்து  நல்மரம் என்று சொல்லிவிட்டார். என்ன ....சும்மா நிற்பவர்கள் நல்மரமா? இருக்காதே....இருக்கவும் கூடாதே. வஞ்சகப் புகழ்ச்சியாக இருக்குமோ? இருக்கலாம்...இருக்கலாம். யாரைச் சொல்கிறார்? எதற்குச் சொல்கிறார்? வாருங்கள். கேட்டுத்தான் பார்ப்போமே... " கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்- சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நன் மரம். "           மூதுரை : பாடல் 13 "நெருக்கமான கிளைகள் உள்ளன. அத...

என் பொண்ணு படிச்சவ

என் பொண்ணு படிச்சவ  என் பொண்ணு படிச்சவ..... நினைப்பு வந்ததும் கண்கள் ஓரமாக கண்ணீர் கட்டிக்கொண்டு நின்றது. என்ன இது... இதற்காகத்தானே இத்தனை நாள் பாடுபட்டேன். இப்போது....ஏன் இப்படி கண்ட கண்ட நினைப்பெல்லாம் வந்து... வாயை மூடிக்கொண்டு.. நெஞ்சுக்குள்ள  ஏதோ   உருள்வதுபோல முட்டிக்கொண்டு  வந்தது. எப்படிச் சொல்லிபுட்டார். நினைச்சுக்கூட பார்க்கல. நான்தான் நாலு எழுத்து படிக்காமல் போயிட்டேன்..பிள்ளைகளாவது படிக்கணும் என்று ஓடி ஓடி உழைத்தேன். பையன்கள் இரண்டு பேரையும் நன்றாகப் படிக்க வைத்தேன். இளையது மூன்றும் பொட்டப்பிள்ளைகள். இதுகளை என்ன செய்வது.? ஆண் பிள்ளைகளைப் போல பெருசா படிக்க வைக்காண்டாம். உள்ளூருல பன்னிரண்டாவது வரை படிச்சா போதும் என்றேன். நம்மளால தாங்காது தங்கம்மா என்றேன். அவள் கேட்டாளா? பொட்டப்பிள்ளைகளும் நல்லா படிக்க ஆசைப்படுவதுங்க...கடனோவுடனோ  வாங்கி படிக்க வச்சா அவர்கள் பாட்ட அவங்க பார்த்துகிடுவாங்க... படிக்க வையுங்கள் என்று மேல பள்ளிக்கூடத்து சார்வாள் சொல்றாவ என்று ஒரே நச்சரிப்பு. சார்வாள் சொன்னாவளா? அவுக சொன்னா சரியாத்தான் இருக்கும். சரி போனால் போகட்டும் . தல...

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணி

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணி.... "தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்"            குறள் :. 462 தெரிந்த -தேர்ந்தெடுத்த இனத்தோடு- இனத்துடன் தேர்ந்து - ஆராய்ந்து எண்ணி- கருதி செய்வார்க்கு - செய்பவர்க்கு அரும்பொருள் - எய்தற்கரிய பொருள் யாதொன்றும் -எதுவும் இல் - இல்லை ஒரு செயலைப்பற்றி தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சேர்ந்து  ஒரு செயலில் ஈடுபடுவோர்க்கு செய்ய முடியாத செயல் என்று ஒன்றுமில்லை. விளக்கம் : ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக அந்தச் செயலைப்பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்களைத்  தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கருத்துகளைப் பெற்று தொடங்கும் செயலில்  எளிதாக  இருக்கும். அத்தோடு என்கடன் முடிந்துவிட்டது என்று இருக்கக் கூடாது தேர்ந்தெடுத்த ஆட்களிடம் பணியை ஒப்படைத்தாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம் பங்களிப்பு இல்லாது இருத்தல் கூடாது. நாமும் அதனைப்பற்றி எல்லா கோணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அதன் நிறை குறைகள் மற்றும் சிக்கல்கள் ந...

சிற்றூறல் உண்ணீராகி விடும்

சிற்றூறல் உண்ணீராகி விடும்  ஒரு பொருளின் தரம் என்பது அதன் உருவத்தைப் பொருத்ததல்ல. அதன்  பயன்பாடு மற்றும் செயல்பாடு  இவற்றை வைத்துதான்   அவற்றின் தராதரம் நிர்ணயிக்கப்படும்.  யாரையும் உருவத்தைப் பார்த்து  மதிப்பீடு செய்ய வேண்டாம். அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து மதிப்பீடு செய்யுங்கள் இதைத்தான் வள்ளுவரும், "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு  அச்சாணி அன்னார் உடைத்து" என்று சொல்லியிருப்பார். உருவம் சிறிதாக இருக்கும் அச்சாணி கூட பெரிய தேர் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் திறன் கொண்டது. அதுபோல உருவம் சிறிதாக இருக்கும் மனிதர்களும் பெரிய காரியங்களைச் செய்யும் திறன் பெற்றவர்களாக இருப்பர். எங்கே? யார் ?எப்படி இருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவருடைய செயல்பாடு எத்தனைபேர் பயன்படும்படி அமைந்துள்ளது என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைத்தான் ஔவையும், மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும்"         மூதுரை : பாடல் : 12 என்கிறார்...

உமி போனால் முளையாதாம்

உமி போனால் முளையாதாம் இரட்டைப்புலவர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டுருப்போம். கண்தெரியாதவர் ஒருவர். கால் நடக்க முடியாதவன் மற்றொருவர். கண் தெரியாதவர் நடக்க முடியாதப் புலவரை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக உள்ள திருக்கோவில்களுக்குச் சென்று  பாடல்கள் பாடுவது வழக்கம். இவர்கள் ஒருவர் இன்றேல் மற்றொருவர் இல்லை. ஒருவர் கேள்வி கேட்க மற்றவர் பதில் சொல்வது போலவே இவர்களுடைய பாடல்கள் அமைந்திருக்கும். அதுதான் இவர்கள் பாடல்களின் சிறப்பு. இலக்கணத்தில்  இரட்டைக் கிளவி என்று ஒன்று உண்டு. பிரித்தால் பொருள் தராது இரட்டைக் கிளவி. சேர்ந்திருந்தால் தான் இரட்டடைக் கிளவியாகவே கருதப் படும். இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் இல்லாமலே போய்விடும். இரண்டு சொற்களும் சேர்ந்திருக்கும் போதுதான் அந்த சொற்கள் இரட்டைக் கிளவி என்ற இலக்கணப் பெருமையைக் கொண்டதாக இருக்கும். இப்படி சேர்ந்திருப்பதில்  சில சொற்களுக்குப் பெருமை  இருப்பதுபோல சில பொருட்களும் சேர்ந்திருந்தால் மட்டுமே  பெருமைக்குரியதாகக் கருதப்படும். குறிப்பாக ஓடு இல்லா விதைகள் முளைப்பதில்லை. எந்த நிலையிலும் மேல் ஓட்டை நீக்கிவிட்டு முளைக்க வையுங்கள் .அ...

முடவனை மூர்க்கன் கொன்றால்....

முடவனை மூர்க்கன் கொன்றால்... வல்லவனுக்கு வல்லவன்  வையகத்தில் உண்டு. யாரும் எனக்கு மிஞ்சியவன் யார் இருக்கிறார்  என்ற மமதை கொள்ள முடியாது.  உங்கள் ஆட்டம்   எல்லாம் சிறிது காலம்தான்.  உங்களையும் அடக்க ஒருவன் வருவான்.  இது திரைப்படங்களில் மட்டும் தான்  சாத்தியம்.   இயற்கையில் அது நிகழுமா? நமது இயலாமையின் காரணமாக அவனை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கடவுள் கையில் கொடுத்துவிட்டு கடந்து போய்விடுவோம். ஆனால் இது நடக்குமோ?  நடக்காதோ .?  யார் அறிவார்?..அந்த நேரத்திற்கு  நமக்கான ஆறுதல் அந்த வார்த்தைதான். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்ற நம்பிக்கையில்தான் எளியவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்புவோம். நம்புவது ஒன்றும் தப்பில்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை. நம் நம்பிக்கைக்கு உரமூட்டும்படியான ஒரு பாடல் விவேக சிந்தாமணியில் உள்ளது. பாடலைப் படித்ததும் எளியவர்க்கெல்லாம் மனதில் ஒரு தெம்பு வந்துவிடும். ஆறுதலாகவும் இருக்கும். வாருங்கள் பாடல் சொல்கிறது என்ன என்று பார்ப்போம். "முடவனை  மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான்...

இணங்கி இருப்பது தீது

இணங்கி இருப்பது தீது "உன் நண்பன் யார் என்று சொல் நீ  யார் என்று  சொல்கிறேன்" என்பார்கள் ஒத்த குணம் உடையார்மாட்டே நட்பு ஏற்படும். நீ நல்லவனாய் இருந்தால் உன்னைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். நீ தீயவனாக  இருந்தால்...? உன் நட்பு வட்டமும் தீமையின் மறு உருவமாகத்தான் அமர்ந்திருக்கும். ஒரு கெட்டவன் பக்கத்தில் போய் ஒரு நல்லவனால் அமர முடியாது. அதேபோல் ஒரு கெட்டவன் நல்லவன் அருகில் அமர விருப்ப மாட்டான். "இடுக்கண் களைவதாம் நட்பு" என்று வள்ளுவர் சொல்வதால் நல்ல நண்பர்கள் நம் துன்பத்திலிருந்து நம்மை கைதூக்கிவிடுபவர்களாக இருப்பர். நல்லவரோடு நட்பு கொள்க என்பதுதான் அனைவரும் நமக்குச் சொல்லித்தந்த பாடம். " கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு " என்பார் வள்ளுவர். தம் பேச்சும் செயலும் வெவ்வேறாக உள்ளவரின் நட்பு கனவில் கூட துன்பம் தருவதாக அமையும். ஆதலால் அப்படிப்பட்ட தீயவனோடு நட்பு கொள்ளாது விலகி இருங்கள்  என்கிறார் வள்ளுவர். நல்லவர்களோடு நட்பு கொள்க. தீயவர்களிடமிருந்து விலகியிருப்பீராக என்பது தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். ஔவையும்  தீ...