நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம்
நல்லார் ஒருவர்க்கு செய்த உபகாரம் நேற்று செய்த உதவியை இன்றே மறந்துவிட்டு நீ யாரோ?நான் யாரோ ? என்று கண்டும் காணாமலும் சென்று கொண்டிருக்கும் மனிதர்கள் வாழும் உலகம் இது. என்ன பெரிய உதவி .? நீ உதவி செய்ததற்கு நானும்தான் பதிலுக்கு உதவி செய்துவிட்டேன் என்று சரிக்குச் சரியாக உதவிக்குக் கணக்கு வழக்கு எழுதி கணக்கு முடிப்போர் உண்டு. உதவியின் அளவு கணக்கு வழக்குகளுக்குள் அடங்குவதல்ல என்பதைப் புரிந்தோர் ஒரு சிலரே. உதவி என்பது யாருக்கும் செய்தோம்? எந்த இடத்தில் செய்தோம்? எப்போது செய்தோம்? என்பதில்தான் அதன் மதிப்பும் மரியாதையும் அடங்கியிருக்கிறது. இதைத்தான் வள்ளுவரும், உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைந்து என்பார். தரமில்லாதவர்களுக்கு உதவியைப் பற்றிய மரியாதை தெரியாதவர்களுக்கு உதவி செய்வது நமது மரியாதையை இழந்து போவதற்கு ஒப்பானது. இவை எல்லாம் காலம் கற்பிக்கும் பாடங்கள். இந்த அறிவு எத்தனைபேர் எத்தனை இடங்களில் சொல்லித் தந்தாலும் காலங்கடந்து பட்டு பட்டு அதன் பின்னர் தான் புத்தி வரும். கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதுபோ...