முற்பகல் செய்யின்....
முற்பகல் செய்யின்..... காகம் ஒன்று மாமரத்தில் கூடு கட்டியது. தான் கட்டிய இந்தக் கூட்டில் முட்டைகள் இட்டு குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவோடு கூட்டைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து வந்தது. ஒரு நாள் எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. விளையாடியபோது மரத்திலிருந்த காகத்தின் கூட்டினைக் குரங்கு பார்த்துவிட்டது. கூடு ஒன்று மரத்தில் இருப்பதைக் கண்டதும் உற்சாக மிகுதியால் கூடுதல் ஆட்டம் போட்டது. தாவித்தாவி கூட்டிற்கு அருகில் சென்றது. கூட்டினுள் எட்டிப் பார்த்தது. கூட்டினுள் யாரும் இல்லை. யாரும் இல்லாத போது விளையாடினால் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது ? சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்து. அப்போது எதிரில் நிற்கும் ஒரு கொய...