சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? "சோழியன் குடுமி சும்மா ஆடுமா? " இந்தப் பழமொழியைக் கேட்டதும் குடுமி வைத்த ஆட்கள் கண்முன் வந்து குடுமியை ஆட்டிக்கொண்டு நிற்பர். அவர்கள் நடக்கும்போதும் பேசும்போதும் குடுமி ஆடிக் காட்டும். அந்த ஆட்டத்திற்கும் அவருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது போலத் தோன்றும். அது பேசுகிறவர்கள் அது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனால்தான் இப்படியொரு பழமொழி சொல்லப்பட்டிருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள். ஒருவேளை அப்படியும் இருக்குமோ? அதுதான் இல்லை. நாம் இன்று பயன்படுத்தும் இந்தப் பழமொழிக்கும் சோழியன் குடுமியை ஆட்டுவதற்கும் சம்பந்தமே இல்லையாம். சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை எடுத்து வந்து எப்படி பழமொழியாகப் பயன்படுத்த முடியும்? ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஒத்துக்கொள்ளும்படியாக ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கலாம் ஒரு பயன் கருதி ஒரு பொருளை விளங்க வைக்கப் சொல்லப்படுவதுதான் பழமொழி . நம்மோடு நெருங்கிப் பழகுபவர்களைப் பார்த்து கிண்டலாகப் பேசுவதற்காக ஒருவேளை இந்தப் பழமொழி வந்திருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணம்...