கூழைப்பலா தழைக்கப் பாடியவர்
கூழைப்பலா தழைக்கப் பாடியவர் கூழுக்குப் பாடியவரைத் தெரியும். உப்புக்கும் புளிக்கும் பாடியவரைத் தெரியுமா? உப்புக்கும் புளிக்கும் பாடலா? காசில்லாமல் போனால் கிடைத்ததற்குப் பாடல் பாடி விட்டுப் போக வேண்டியதுதான். சேர்ந்தே இருப்பது புலவரும் வறுமையுமல்லவா? வயிற்றுக்காகத்தானே இந்தப் பாடும் பாடலும். வயிற்றுப்பசி . வாழ்க்கைச் சக்கரம் ஓட வேண்டும். அதற்காகத்தான் வள்ளல்களை நாடி ஓடி பாடி பொருட்களைப் பெற்றனர் புலவர்கள். இந்தப் புலவர்மட்டும் உப்புக்கும் பாடுவேன். கூடவே புளிக்கும் பாடுவேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். கூழாயிருந்தாலும் சற்று உப்பு இருந்தால்தானே குடிக்க முடியும். அதனால் அப்படி சொல்லி இருப்பாரோ? இருக்கலாம். சொல்லியவர் யார்? அறிந்து விடுவோம் வாருங்கள். ஒருநாள் ஔவை தெருவில் வந்துகொண்டிருகிறார். சற்று அசதி. எங்காவது சற்று அமர்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்கிறார் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. என்ன என்று எட்டிப் பார்க்கிறார். அழுகைக்கான காரணத்தைக் கேட்கிறார். "தாயே நான் என் செய்வேன்? என் கணவர் வந்து ...