Posts

Showing posts from December, 2023

தீதொழிய நன்மை செய்

தீதொழிய நன்மை செய்  மனித மனங்கள் வேறுபடுகின்றன. மதங்கள் என்றும் வேறுபடுவதில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பை மட்டும்தான். தீமை செய்வதற்கு எந்த மதமும் அனுமதிப்பதில்லை. நன்மை செய்தால் நல்லது கிடைக்கும். என்பதை ஆழ விதைத்துச் செல்வது மதங்கள். ஆனால் மதங்களுக்குள் ஏன் இத்தனை மாறுபாடுகள்? வேறுபாடுகள்? மதத்தின் பெயரால் ஏன் சண்டைப் சச்சரவுகள் ? இப்படியொரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம்  மனித மனங்களும் அவற்றில் நிரம்பிக் கிடக்கும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் அன்றி வேறென்ன சொல்வது? அதனை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது? நானும் நீங்களும் சொன்னால் கேட்டுவிடவா போகிறார்கள்? இப்படி ஒவ்வொருவரும்  நமக்கென்ன நமக்கென்ன  என்று விலகிச் சென்றால் எப்படி? யாராவது ஒருவர் பேசித்தானே ஆக வேண்டும்.புரிய வைத்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? அதற்குதான் யாம் இருக்கிறோம் என்கிறார் ஔவை. தனது நல்வழி பாடல்களின் முதல் பாடலே  நல்வழிப்படுத்தவதாக அமைந்துள்ளது. இதோ பாடல் உங்களுக்காக... "புண்ணியம் ஆம் பாவம் போல் போனநாள் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால் ...

உள்ளத்தோடு உறவாடு

உள்ளத்தோடு உறவாடு 1." பேசும் வார்த்தைகள் வெற்றி      தோல்விக்கான விதைகள் " 2. "உண்மையாய் இருக்கலாம்.     ஊமையாய் இருக்கக் கூடாது." 3. "தீதும் நன்றும் பிறர் தர வாரா " 4.  "உண்மை இருக்கும் இடத்தில்      ஊன்றுகோல் தேவையில்லை." 5." பாதைகள் பயணத்தைத்      தீர்மானிப்பதில்லை.       6. "காலம் சிறந்த ஆசான்" 7. "உங்களுக்கு ஆலோசனை வழங்க    உங்களைவிட சரியான மனிதர்   வேறு யாரும் இருக்க முடியாது." 8. "பணம் ஒரு பிரிவினைவாதி" 9.  "நேர்மைக்கு முன்னால்      துரோகம் தோற்றுப் போகும்." 10. "தன்னை மட்டுமே நம்புகிறவன்       யாரிடமும் தோற்பதில்லை. 11.   "மனதின் மொழி அன்பு 12.  "பணம் உதடுகளைத் திறக்க        வைக்கும்." 13.  "மௌனம் பேசும்" 14. "அவரவர் மனமே        அவரவர்க்குச் சாட்சி" 15. "உறவுகளை உயிரென்று   ...

இறைவனை எப்போது தொழ வேண்டும்

இறைவனை தொழுவதற்கு உகந்த  நேரம் எது? "என்று பாலன் தன் தன் நண்பன் மதிவண்ணனிடம் கேட்டான். "அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத் தொழுவதற்கு உகந்த நேரம் "என்று  பதிலளித்தான் நண்பன். "அமைதியான அந்தக் காலைப் பொழுதுதான் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும் இல்லாத அமைதியானச் சூழல் பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான். ஆனால் என்னால் அது முடிவதில்லையே" என்றார் பாலன். "நீ சொல்லுவதும் சரிதான். வேலை வேலை என்று எப்போதும் கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுவதால் கடவுளைத் தொழ நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது" புலம்பினான் மதி வண்ணன். "  இப்படி ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லிக்   கொண்டிருந்தால் இறைவனைத் தொழுவதற்கு   கால நேரமே கிடையாதா ?  ஒரு மனிதன் எப்போதுதான்  இறைவனை வணங்குவது? " ஒரே குழப்பமாக இருக்கிறது. கையைப் பிசைந்தபடி ஏதோ சிந்தனையில் அமர்ந்தான் பாலன். "இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே  ஆக வேண்டும்." " யாரிடம் போனால் இதற்குத் தீர்வு  கிடைக்கும் ?" இப்படி எனக்குள் கேள்விகள் எழ ஆரம்பித்தன.   "வாருங்கள...

கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் வந்ததும் கிறிஸ்துமஸ்  கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எவ்வளவுதான் அலங்காரங்கள்  செய்திருந்தாலும் அதில் கூடுதல் சிறப்பாக இருப்பது கிறிஸ்துமஸ் மரம். கிறிஸ்துமஸ் மரம் இல்லாது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முழுமை பெறாது.  அது என்ன கிறிஸ்துமஸ் மரம்? அதில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது?   அது எதற்காக வைக்கப்படுகிறது? அதன் வரலாறு என்ன? பின்னணி என்ன? என்று ஆயிரம்  கேள்விகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும் என்றால் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அது பற்றி வழிவழியாக சொல்லப்பட்டு வரும் செய்திகளில் இருக்கும் உண்மைகளை அறிய வேண்டும். வாருங்கள் கிறிஸ்துமஸ் மரம் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வோம். கிறிஸ்துமஸ் மரம் பற்றிய கதைகள் பல உண்டு. அவற்றுள் முதன்மையாகச் சொல்லப்படும் ஒரு கதையின் நாயகன் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த  போனிபோஸ் என்ற பாதிரியார். ஒருமுறை போனிபோஸ் ஜெபக்கூட்டத்திற்காக பக்கத்து ஊருக்குப் சென்றிருந்தார். ஜெபக்கூட்டம் முடிந்து வரும் வழியில்  கூட்டமாக மக்கள் ஓக் மரத்தை ...