உரைப்பார் உ ரைப்பவை எல்லாம்....
உரைப்பார் உரைப்பவை எல்லாம்.... " உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் " குறள். : 232 உரைப்பார் -சொல்லுபவர் உரைப்பவை -சொல்லுபவை எல்லாம்-அனைத்தும் இரப்பார்க்கு- ஏற்பவர்க்கு ஒன்று- ஒன்று ஈவார்மேல் -கொடுப்பவர் மேல் நிற்கும்-நிலைத்திருக்கும் புகழ்-- புகழ் உலகத்தில் புகழ்ந்து சொல்பவர் சொல் எல்லாம் இரப்பவர்க்குக் கொடுப்பதால் கிடைக்கும் புகழாக நிலைத்து நிற்கும். விளக்கம்: இவ்வுலகத்தில் புகழ்ந்து பேசப்படுவது எது? ஈகை மட்டுமே பலராலும் பல இடங்களில் புகழ்ந்து பேசப்படும். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் பெருந்தன்மையாளர்களையே இவ்வுலகம் கொண்டாடி மகிழும். இந்தப் பாடலில் வள்ளுவர் உரைப்பார் உரை என்ற ஒரு சொற்றொடரைக் கையாண்டுள்ளார். உரைப்பார் உரை என்றால் என்ன? ஒர...