திருக்குறளில் காலம்
வள்ளுவர் பார்வையில் காலம் முன்னுரை : மனிதகுல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இன்றியமையாத பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காலம் அறிதல். ‘காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்று கூறுவதும் அதனால்தான். காலமும், இடனும் அறிந்து செயல்பட்டால் நாம் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் வெற்றி கிட்டுவது உறுதி. தொல்காப்பியர் கூறும் காலம்: . தொல்காப்பியர் பொழுது என்பது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும் என்கிறார். இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்பவை பெரும் பொழுது எனவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்பவை சிறுபொழுது எனவும் தமிழ் இலக்கணம் காலத்தை வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஆனால் வள்ளுவர் பார்வையில் காலம் என்பது பொழுதினை மட்டும் குறிக்காமல் உரிய காலம் என்னும் பரந்துபட்டப் பொருளில் சொல்லப்பட்டுள்ளது. காலம் அறிந்து செயல்படு: “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது ” காக்கையையும். கோட்டானையும் உவமையாக கூறி காலத்தின் சிறப்பை முன்மொழிகிறார் வள்ளுவர். காக்கையை விடக் கோட்டான் வலிமை மிக்கது என்பத...