கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் ஔவையைப் படிக்காமல் அரிச்சுவடி கற்றிட முடியாது. ஔவை இல்லாமல் தமிழ் இல்லை . ஔவையின் ஆத்திச்சூடி இல்லாமல் தமிழ் எழுத்தினைப் படித்தவரும் இல்லை. ஔவையைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அவர் படைப்புகள் முதல்தரமானவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஔவையின் ஆத்திசூடி , கொன்றை வேந்தன் , நல்வழி ஆகியவை அருமையான நீதிநூல்களாகக் கருதப்படுகின்றன. நீதிநூல்கள் வரிசையில் ஔவையின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்று கொன்றை வேந்தன். கொன்றை வேந்தனில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன. அத்தனையும் என்றென்றும் நம் வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய கருத்துக்களைக் கொண்டவை. வாழ்த்து " கொன்றை வேந்தன் ...