சித்திரமும் கைப்பழக்கம்.....
சித்திரமும் கைப்பழக்கம்.... ஒரு செயலை நாளும் செய்து வந்தால் நாளடைவில் அது பழக்கமாகிப் போகும். பழக்கம் தொடர்ந்து நடைபெறுமானால் அது வழக்கமாகிவிடும். பழக்கம் வழக்கமாகி அதுவே பழக்கவழக்கமாகிவிடுகிறது. நல்லதோ கெட்டதோ எல்லாமே பழக்கத்தால் வருவதுதாங்க... பழக்கம் என்றாலே பழகுதல் , பயிற்சி செய்தல் என்பதுதான் பொருள். எந்தச் செயலை செய்வதற்கும் பயிற்சி வேண்டும். பழக்கம் என்பது கற்றல் என்றுதான் கொள்ள வேண்டும். பழக்க வழக்கம் நாளடைவில் மரபாக கடைபிடிக்கப்பட்டு அதுவே ஒரு செயலாக மாறிவிடுகிறது. நமது கலாச்சாரம், மரபு எல்லாமே இவ்வாறு பழக்கவழக்கத்தினால் வந்தவைதான் என்று கூறுவார்கள். பழக்கம் இல்லாவிட்டால் எந்த செயலையும் எளிதாகச் செய்ய முடியாது. பிறந்த கன்று எழும்பி நடக்க முயற்சி செய்யும். கால்கள் தடுமாறி கீழே விழும். எத்தனை முறை இடறினிலும் அது தனது முயற்சியை விட்டுவிடுவதில்லை. நடக்கும் வரை அதன் முயற்சி தொடரும். அதன் பின்னர் வழக்கமாக நடக்கத் தொடங்கிவிடும். சைக்கிள் ஓட்ட வேண்டுமா....? பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்கிறோம...