Posts

Showing posts with the label ஈஸ்டர் வாழ்த்தும் முயலும் -கட்டுரை

ஈஸ்டர் வாழ்த்தும் முயலும்

Image
ஈஸ்டர் வாழ்த்தும் முயலும்  ஈஸ்டர் பண்டிகை  நெருங்கி விட்டது. ஆளாளுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவதும் கவிதை  எழுதி அனுப்புவதும் என்று பரபரப்பாக இருக்கும் நேரம் இது. நானும் வாழ்த்து அட்டை அனுப்ப  அட்டைகளைத் தேடித்தேடி தேர்வு செய்யத் தொடங்கினேன். எல்லா அட்டைகளிலும் முட்டையோடு ஒரு முயல் ஒன்று தலையைத் தூக்கிக் கொண்டு நின்றது. என்ன இது முட்டையோடு முயலா? ஈஸ்டர் வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போது வெறுமனே இயேசு உயிர்த்தெழுந்த படங்கள் இருந்தால் போதாதா?  ஆனால் ஈஸ்டர் வாழ்த்து அட்டை மட்டும் மற்ற பண்டிகை வாழ்த்து அட்டைகளை விட சற்று வேறுபட்டிருக்கிறதே! முட்டையோடு முயலும்  காதுகளை உயர்த்தி கம்பீரமாக நிற்கிறது. ஈஸ்டர் வாழ்த்து அட்டையில் மட்டும்  ஏன் இந்த மாறுபாடுகள் வேறுபாடும்? முட்டையோடு முயலும் சேர்ந்து  இந்த ஈஸ்டர் வாழ்த்து அட்டைப் படத்தில் இடம் பிடித்தது எப்படி? முட்டைக்குக் கிடைத்த அதே முக்கியத்துவம்  முயலுக்கும் கிடைக்கக் காரணம் என்ன? எந்தவிதக் காரணமும் இல்லாமல் முயல் முக்கியத்துவம் பெற்றிருக்க முடியாது. அப்படியானால் இந்த முயல் எங்கிருந்து வந்தத...