நிலத்தினும் பெரிதே
நிலத்தினும் பெரிதே தலைவன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கின்றான் . அவளுக்கும் அவன் மீது காதல். களவில் காதல் தொடர்கிறது. உன்னைக் கனவிலும் பிரியேன். பிரிந்தால் உயிர் வளியேற்ற என்று காதல்மொழிபேச காலம் கடக்கிறது. திருமணம் குறித்து எந்தவொரு பேச்சுமில்லை.இப்படியே எவ்வளவு நாட்கள்தான் காதலித்து கொண்டிருப்பது? இப்படியே இருவரும் காதல் செய்து கொண்டிருந்தால் இதற்கு முடிவுதான் என்ன? திருமணம் செய்து கொள்ள வேண்டாமா? கவலைப்படுகிறாள் தோழி ஒருநாள் தலைவியைப் பார்க்க வந்திருக்கிறான் தலைவன். பிறர் அறியாதவாறு மறைவாக நின்று கொண்டிருக்கிறான். தலைவன் மறைந்து நிற்பதைத் தோழி பார்த்து விடுகிறாள். இதுதான் நல்ல வாய்ப்பு. தலைவனிடம் கேட்டுவிட வேண்டியதுதான். ஆனால் இது சாத்தியமாகுமா? நேரடியாக எப்படி கேட்பது? தலைவன் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது? ஆனாலும் தலைவன் கேட்கும்படியாக தலைவனைப் பழித்துப் பேசுகிறாள் தோழி! தன் அன்பிற்குரியவனை இன்னொருத்தி தவறாகப் பேசுவதா? பொறுத்துக் கொள்வாளா தலைவி பொங்கி எழுகிறாள். தலைவனுக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது தெரியுமா ? சொல்கிறேன் கேள் என்று தலைவன...