கூலி பாக்கி வைக்க வேண்டாம்
கூலி பாக்கி வைக்க வேண்டாம் வேலைக்கு கூலி வேண்டும். கூலிக்கு வேலை வேண்டும். என்ன இது ....இரண்டும் ஒன்றுதானே ....இன்னொருமுறை வாசியுங்கள். பொருள் வேறு வேறு இல்லையா! இதுதான் நாடு முழுவதும் கேட்கும் குரல்கள். வேலை இருப்பவனுக்கு சரியான கூலி இல்லை. கூலிக்கு வேலை கிடைக்குமா என்ற கூப்பாடு மறுபக்கம். இப்படி இந்த இரண்டையும் சுற்றி சுற்றிதான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. வேலை செய்தவனுக்கு கூலி கொடுங்கப்பா... தொழிற் சங்கங்கள் கரடியாய்க் கத்தினாலும் காது கொடுத்துக் கேட்காத முதலாளி வர்க்கம். அதுவும் தினக்கூலிகள் படும்பாடு....பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, சாயங்காலம் கூலி வாங்க முதலாளி முன் கூனிக்குறுகி நிற்பதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும். வேலைதான் ...