சித்திரமும் கைப்பழக்கம்
சித்திரமும் கைப்பழக்கம் ஒரு செயலை நாளும் செய்தால் அது பழக்கமாகிப் போகும். பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தால் அது நாளடைவில் வழக்கமாகிவிடும். பழக்கம் என்றாலே பழகுதல் , பயிற்சி செய்தல் என்பதுதான் பொருள். அப்படியானால் பழக்கம் என்பது கற்கும் செயல் என்றுதான் கொள்ள வேண்டும். பழக்கத்தின் தொடர்ந்த நிலையே பழக்கவழக்கம். பழக்க வழக்கம் நாளடைவில் மரபாக கடைபிடிக்கப்படும் ஒரு செயலாக மாறிவிடுகிறது. பழக்கம் இல்லாவிட்டால் எந்த செயலையும் எளிதாகச் செய்ய முடியாது. பிறந்த கன்று எழும்பி நடக்க முயற்சி செய்யும். கால்கள் தடுமாறி கீழே விழும். நடப்பதற்கான முயற்சி எடுத்துக் கொண்டு நடக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறது. சைக்கிள் ஓட்ட வேண்டுமா.... பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்கிறோம். சமையல் செய்யும் கலையும் பழக்கத்தால் வாய்க்கப் பெறுவதுதான். பயிற்சி என்கிறோமே அதுதான் பழக்கம் என்பது இப்போது புரிந்து போயிருக்கும். நீச்சல் பழகிக் கொண்டால் எவ்வளவு ஆழமான கிணற்றிலும் ந...