கால் நொந்தேன் நொந்தேன்
கால் நொந்தேன் நொந்தேன் " யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே பேதம் புரியலே...." கண்ணதாசனின் இந்தப் பாடல் காதோடு வந்து மோத ஏதேதோ நினைவுகள் வந்து இதயத்தைத் தட்ட மெல்லச் சிரித்துக் கொண்டேன். அன்றொருநாள்.... சோழமன்னன் சோலைவளம் கண்டுவர காவிரிக் கரையோரம் நடந்து வந்துகொண்டிருந்தான்.காவிரிக் கரையோரத்தில் ஒரு சங்கு ஒன்று வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கி அண்ணாந்து கிடந்தது. அப்போது ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தில் பூத்திருந்த பூவிலிருந்து ஒரு துளி தேன் திறந்திருந்த அந்த சங்கின் வாயில் விழ... ஆஹா...என்னவொரு அருமையான காட்சி! அந்தக் காட்சியில் தன்னைத் தொலைத்து சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான் மன்னன். அந்த காட்சியை அசை போட்டபடி அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன். இயற்கைக்குத்தான் எத்துணை கருணை!அந்தக் காட்சியும் அதன் நேர்த்தியும் மன்னன் நினைவைத் தட்டித் தட்டிச் செல்ல இரவு முழுவதும் தூக்கம் வராமல் அந்தகாட்சியின் நினைவியில் தூக்கம் தொலைத்துப் புரண்டு கொண்டிருந்தான் . அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்தி...