காலமெல்லாம் படிப்பு
காலமெல்லாம் படிப்பு " கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு " யாராவது நான் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டேன் என்று சொல்ல முடியுமா? அப்படி ஒருவர் இருந்ததாக சரித்திரம் சொன்னதில்லை. பேரறிவாளர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இறுதிவரை புத்தகத்தோடு புத்தகமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் என்றுதான் சொல்லுவேன். கற்க வேண்டியவை உலகில் ஏராளம் உள்ளன. நான் ஆசிரியர். ஆதலால் எனக்கு எல்லாம் தெரியும். இனி எனக்குக் கற்பித்தல் மட்டுமே தொழில் என்று யாரும் கற்றலை விட்டுவிட முடியாது. படித்த ஆசிரியரைவிட படிக்கின்ற ஆசிரியர்கள் கற்பித்தலில் ஒரு முழுமை இருக்கும். பாடத்திட்டத்தைத் தாண்டிய கருத்தும் இருக்கும். மாணவர்களுக்குப் புதிய புதிய செய்திகளைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆசிரியர்கள் வாயிலிருந்து விழும் ஒவ்வொரு சொல்லும் நாளை விருட்சமாக வளர்ந்து நிற்கும். ஆதலால் நாளும் கற்றல் நடைபெற வேண்டும். கற்றதோடு நிறுத்திக் கொள்ளாமல் கற்றவற்றை மாணவர்கள் மத்தியில் விதைத்துக்கொ...