வீரத்தாய்
வீரத்தாய் போரில் விழுப்புண் பெற்று வீர மரணமடைந்த வீரர்களை உலகம் கொண்டாடும். வீரன் என்று போற்றும். ஊர் போற்றட்டும். உற்றார் உவக்கட்டும். பெற்றோர் உவக்கலாமா? பெற்ற பிள்ளை போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான்.எந்தப் பெற்றோரும் பதறியடித்துக் கொண்டு போர்க்களம் நோக்கி ஓடுபவர். இங்கேயும் ஒரு தாய் ஓடுகின்றாள். ஓட்டம் மகனைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் மட்டுமல்ல. அவன் எப்படி இறந்தான் என்பதை யான் அறிய வேண்டும். என்பதுதான் அந்தப் பெண்ணின் ஆர்வம். இறந்து பட்டான் என்ற சொல் அம்பாக நெஞ்சைத் தைக்க பேச்சுமூச்சற்று கீழே சாயவில்லை. மூலையில் இருந்து ஒப்பாரி வைக்கவில்லை. பேசுகிறாள். இறந்த என் மகன் எப்படி இறந்தான் என அறிதல் வேண்டும் என்கிறாள். கையில் வாளொன்றை எடுத்தாள் எதற்காக.? தன் மகனை போரில் வீழ்த்திய எதிரியின் தலையைக் கொய்து வரவா? முதுமகளாயிற்றே... இது இவளால் கூடுமோ? இயலாத ஒன்றைச் செய்வதற்காக ஏனிந்த ஓட்டம்? இயலக்கூடிய ஒன்றைக் கண்டு வரப் போகிறாளாம்? அப்படி யென்ன கண்டு வரப் போகிறாள் என்கிறீர்களா? என் மகன் என்ன கோலத்தில் இறந்து கிடக்கிறான் என்பதைக் கண்டுவரப் போகிறேன். அவன் புறம...