உள்ளார் கொல்லோ தோழி
உள்ளார் கொல்லோ தோழி.... காதல் நேற்று இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும். காதலின்றேல் உயிர்கள் வாழ்தல் எவ்வாறு? உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல வாழ்க்கைக்குக் காதல் முக்கியமானது. காதலில்லாத வாழ்க்கை உயிரற்றது; உணர்வற்றது; மகிழ்வற்றது; அர்த்தமற்றது. அதனால்தான் இலக்கியங்களில் காதல் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. காதல் இயற்கை உணர்வு. அதைத் தடையிட முடியாது. கட்டுப்படுத்தலாம். ஒரு கன்னிக்குக் காளை மீது காதல் வர ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவனுக்குள் / அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பண்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலே போதும். அது காதலாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு காதல் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. காதல் காதல் காதல் காதலின்றேல் சாதல் இப்படிச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதுவரை இப்படியே காதலிக்கும் கொண்டிருப்பது.? திருமணம் செய்ய வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். அதற்குப் பொருள் தேட வேண்டும். காதலே நான் பொருள் தேடும் வரை ஒளிந்திரு என்று ஒளித்து வைக்க முடியாமல் காதலித்தாயிற்று. இப்போது பொருள் தேட தலைவன் சென்று விட்டான். நாட்கள் கடந்தன. வருவாரோ மாட்டாரோ...