ஆங்காலம் ஆகும்.....
ஆங்காலம் ஆகும் " காலம் கருதி யிருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்” என்பார் வள்ளுவர். உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் காத்திருக்கும் பொறுமை வராது. இப்போதே செய்து முடிக்க வேண்டும்.உடனடியாக பெரிய ஆளாக வேண்டும். உலகமெல்லாம் தன் கைக்குள் வர வேண்டும் என்று ஆசைப்படுவர். தங்கள் ஆசையை நிறைவேற்ற எதை எதையெல்லாமோ செய்து பார்ப்பர். ஆனால் எதுவும் கைகூடாது. கடைசியில் என்ன இது.... நான் என்ன செய்தாலும் ஒன்றும் கைகூட மாட்டேங்குதே... என்று ஒரு விரக்தியான மனநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். யாரோ ஒருவர் மட்டுமே இப்படி நடந்து கொள்வதில்லை. நம்மில் பலர் இப்படிப்பட்ட மனநிலை உடையவர்கள்தான். ஏன் இந்த அவசரம்? ஆங்காலம் ஆகும். பொறுமையாக இருங்கள் என்று நமக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தருகிறார் ஔவை. அதைப் பற்றிய ஔவையின் பாடல் இதோ உங்களுக்காக... " எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு" நல்வழி...