மியாவாக்கி காடுகள்
மியாவாக்கி காடுகள் பள்ளியில் செய்தி வாசிக்கும் நேரம். தான் குறித்து வைத்திருந்த நான்கைந்து தலைப்புச் செய்திகளை கடகடவென்று வாசித்துவிட்டு தன் இடத்தில் போய் நின்று கொண்டான் செய்தி வாசித்த மாணவன். ஆசிரியருக்குப் பயந்து செய்தியைக் கவனிப்பதுபோல அனைத்து மாணவர்களும் நின்று கொண்டிருந்தனர் . எனக்கு எப்போதுமே செய்தியில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால் கவனமாக செய்தி வாசிக்கும்போது கேட்பேன். இன்று செய்தி வாசித்த மாணவன் பெரிய நகரங்களில் மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் ஒப்புதல் வழங்கினார் என்று ஒரு செய்தியையும் வாசித்தான். மியாவாக்கி காடுகளா? புதுமையாக இருக்கிறதே! அது என்ன மியாவாக்கி காடுகள்? சதுப்பு நிலக் காடுகள், பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள் படித்திருக்கிறோம். இந்த மியாவாக்கி காடுகளைப் பற்றி கேள்விப்பட்டதாக என் நினைவில் இல்லை. ஒருவிதமான குழப்பமான மனநிலையில் வகுப்பிற்குள் சென்றேன். "ஆசிரியரிடம் கேட்கலாமா? வேண்டாம். இதுகூட தெரியாதா? இப்போ இதைத் தெரிந்து என்ன செய்யப்போற? காடு வளர்க்கப் போகிறாயா? என்று திட...