எத்தனை குருவிகள்
எத்தனை குருவிகள் சோழ நாட்டிலுள்ள ஓர் அழகிய ஊர் பூம்பொழில். அங்கு பொன்னுசாமி என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். அவர் தன் வயலில் விளைந்த ஒரு கலம் நெல்லை காய வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வேலை செய்த அலுப்பு. சற்று கண் அயரலாம் என்று ஓய்வெடுத்தார். மணி மூன்று ஆகிவிட்டது. எழும்பி முகம் கழுவிவிட்டு நேரே வயலக்குப் போனார். அங்கு நெல் ஒன்று மில்லை. அதிர்ந்து போனார். சுற்றும்முற்றும் பார்க்கிறார். ஒரு குருவியின் வாயில் நெல் மணிகளைக் கண்டார். ஆத்திரத்தில் அருகில் கிடந்த மண்ணாங்கட்டியை எடுத்து குருவி மீது வீசினார். மண்ணாங்கட்டி பட்டு குருவி கீழே விழுந்தது. அருகில் சென்று பார்த்தால் குருவி இறந்து போனது. இப்போது விவசாயிக்கு ஓர் அற்ப ஆசை. நான் ஒரு கலம் நெல் காய் வைத்தேன். அவ்வளவு நெல்லையும் தின்ன குருவிகள் எங்கிருந்து வந்தன? அப்படி எத்தனை குருவிகள் தான் வந்திருக்கும்? இந்தக் குருவி எத்தனை நெல் மணிகள் தின்றிருக்கிறது என்பது இந்தக் குருவியின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் தெரிந்துவிடும் என்று வயிற்றைக் கிழித்துப் பார்த்தார். குருவியின் வயிற்றுக்குள் மூன்று நெல் மணிகள் ...