வீடு
வீடு காலையிலிருந்தே அன்னக்கிளி ஒரு படபடப்போடு இருந்தார். மோட்டைப் பார்ப்பதும் ஏதேதோ நினைவில் தன்னைத் தொலைப்பதும் என்று பழைய காட்சிகள் எல்லாம் கண்முன் வந்து வரிசைகட்டி வந்து நின்றன. நடந்தவை எல்லாம் கனவா.... இல்லை நனவா....எதையுமே எளிதில் நம்பமுடியவில்லை. எத்தனை ஆண்டு கனவு. சிறுகச்சிறுக சேர்த்து வைத்தப் பணத்தில் கட்டிய வீடு. ஒவ்வொரு செங்கலுக்கும் ஒருநாள் உழைப்பு கொடுக்க வேண்டியிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகாலம் குடிசை வாழ்க்கை. வெயில் காலங்களில் ஓட்டைவழியாக சூரியவெளிச்சம் அத்துமீறி அடாவடித்தனம் பண்ணும். மழைக்காலங்களில் எங்கு எல்லாம் ஓட்டைத் தெரிகிறதோ அந்த இடங்களைத் தேடிப் பிடித்து தாராளமாய் தண்ணீர் ஊற்றுவதும் சொட்டுச் சொட்டாக சொட்டிச் சேட்டை செய்துவதுமாய் மழை விளையாட்டுக் காட்டும். இது பலநாள் நிகழ்வானதால் இதை எல்லாம் அன்னக்கிளி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் பாடென்றால் பெரிதாகத் தெரியும். நித்தம் நித்தம் இதே பாடுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டதால் எல்லாமே பழகி விட்டது. வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ளும். குளிரும் மழையும் வந்து கும்மாளம் போ...