இலவு காத்த கிளி போல
இலவு காத்த கிளி போல தமிழில் உவமைகளுக்குப் பஞ்சம் இருக்காது.தமிழில் உவமைகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் அவை யாவும் வெறுமனே பொழுதுபோகிற்காக சொல்லப்பட்டவை அல்ல. மக்கள் உள்ளங்களின் பழுததை நீக்கி மனிதகுலம் பண்படுத்தப் பட வேண்டும். நல்வழிப்படுத்தப்பட வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லநோக்கத்திற்காகவே சொல்லப்பட்டவை. நேரடியாக ஒரு கருத்தைச் சொல்லும்போது எளிதில் புரிந்து கொளாள முடியாது. சில செயல்களைப் புரிய வைக்க வேண்டும் என்றால் தெரிந்த ஒரு பொருளை உவமையாக கூறி புரிய வைக்க வேண்டும். அது இது போல இது அது போல என்று தெரிந்த ஒரு பொருளை முன்னிருத்திப் புரிய வைப்பது வழக்கம். அவ்வாறு சொல்லப்பட்டவை தான் பழமொழிகளும் பழக்கமொழிகளும். நம்மைப் புரிய வைப்பதற்குத்தான் பழமொழிகள் உவமைகளைச் சுமந்து வருவதுண்டு. அதுவும் நம் கண்முன்னால் இருக்கும் ஒரு பொருளை உவமையாகச் சொல்லும்போது நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அப்படிச் சொல்லப்பட்ட எல்லா பழமொழிக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கும...