ஆண்டாண்டு அழுது புரண்டாலும்...
ஆண்டாண்டு அழுது புரண்டாலும்... "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு " என்பார் வள்ளுவர். நேற்று இருந்தவர் இன்று இல்லை. அத்தகைய பெருமை உடையது இந்த உலகு. யாரும் இந்த உலகு எனக்குச் சொந்தம்.நான் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்வேன். அதற்காக ஏராளமாக பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு பொருள் சேர்த்து வைத்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒருநாள் செல்ல வேண்டியதுதான். இந்த உண்மை புரியாது நான் பெரியவன் நீ பெரியவன் என்று பெருமிதம் கொண்டு திரிவதால் யாருக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது. அதனால் உலகில் இருக்கும் வரை நல்லது செய்து வாழுங்கள். இதைத்தான் அனைத்துப் பெரியோர்களும் சொல்லி வருகின்றனர். இந்தக் கருத்தைக் கொண்டுள்ள நல்வழிப் பாடல் உங்களுக்காக... " ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம்அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும்" நல்வழி. பாடல் 10 "இப்பெரிய உலகத்திலுள்ள மனிதர்களே, ஆண்டு முழுவதும் அழுதுபுரண்டாலும் இறந்தவர் உய...