Posts

Showing posts with the label ஔவையின் நல்வழி-விளக்கம்

ஔவையின் நல்வழி

ஔவையின் நல்வழி  ஔவையார் எழுதிய நல்வழி என்னும் நூல்  நாற்பத்து ஒரு பாடல்கள் கொண்டது.  வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் நூல்  ஆதலால் நல்வழி என்ற பெயர் பெற்றது.  எல்லா பாடல்களுமே அருமையான  கருத்துகள் கொண்டவை.  எனக்கு அதிகம் பிடித்த ஐந்து பாடல்களை உங்களோடு  பகிர்ந்துள்ளேன்.    1.  ஆன முதலில் அதிகம் செலவானால்    மானம் அழிந்து மதிகெட்டுப் _ போனதிசை   எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்   நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.  வருவாயைவிட அதிகம் செலவு செய்யாதே. அப்படி செலவு செய்தால் மானம் இழந்து பிறனிடம் கடன்  வாங்க கைநீட்டி நிற்கும் நிலை ஏற்படும் . அறிவு மழுங்கிப் போகும்.  கையில் பணம் இல்லையென்றால் எங்கே பணம் கேட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் திருடனைக் கண்டு விலகி ஓடுவதுபோல அனைவரும்  உன்னைக் கண்டு விலகி ஓடுவர். நீ  ஏழேழு பிறப்புக்கும் தீயவனாகவே  நடத்தப்படுவாய்.  நல்லவர்க்குகூட நாம் பொல்லாதவனாகத்தான்  தெரியும்.ஆதலால் ஒரு போதும் வருவாய்க்கு அதிகமாகச் செய்து வறியவனாகிவிடாதே எ...