Posts

Showing posts with the label குணம்நாடிக் குற்றமும் நாடி...

குணம்நாடிக் குற்றமும் நாடி....

குணம்நாடிக் குற்றமும் நாடி... குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்                               குறள்  504 குணம் நாடி_ குணங்களை ஆராய்ந்து குற்றமும் நாடி _ குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் _ அவற்றிற்கிடையே உள்ள மிகை நாடி_ மிகுதியானவற்றை அறிந்து மிக்க _      மிகுதியாக இருப்பனவற்றை கொளல் _ கொள்க ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து அவற்றுள் எது மிகுதியாக  உள்ளது என்பதை பகுத்து அறிந்த பின்னரே  ஒருவரைப் பற்றிய   தெளிவான முடிவுக்கு வர வேண்டும். விளக்கம் : நூறு விழுக்காடு நல்ல குணங்கள் உள்ளவர் இவர் என்று எவரையும் சொல்லிவிட முடியாது.அதேபோல நூறு விழுக்காடு குற்றம் மட்டுமே உடையவர் என்றும் எவருமே இருக்க முடியாது. எல்லாரிடமும் குணமும் உண்டு.  குறைகளும் இருக்கலாம்.  குறைகளைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால்  நிறைகள் தெரியாது.  நிறைகளை மட்டுமே பார்த்தால்  குறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. குணங்கள் என்னென்ன இருக்கிறது என்...