நீதி சொல்லும் சேதி
நீதி சொல்லும் சேதி ஆறாம் நாள் விழித்திரு " சோம்பேறியே எறும்பினிடத்தில் போய் அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்." நீதிமொழிகள் 6: 6 எறும்பு அற்பமான பூச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவை மழைக்காலத்திற்காக கோடைகாலத்திலேயே உணவை சேமித்து வைத்துவிடும். மழைக்காலம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா இருப்பதில்லை. தங்கள் உணவை தாங்களே தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும். நான் முந்தி நீ முந்தி என்று முண்டியடித்துக் கொண்டு செல்வதில்லை. ...