ஆரையடா சொன்னாயடா
ஆரையடா சொன்னாயடா இரண்டு பெரிய ஆளுமைகளுக்குள் எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். நீயா ... நானா... என்ற போட்டி வரும்போது உரசல் ஏற்படுகிறது. அண்ணன் தங்கைகளுக்குள் போட்டி. பள்ளியில் சக மாணவர்களுக்குள் போட்டி. பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி. அண்டை மாநிலத்தோடு போட்டி. இப்படி போட்டி நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போட்டி இருக்கலாம். தப்பே இல்லை. போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது பகையாக மாறாது. மாறவும் கூடாது. இப்போது இரு பெரும் புலவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆரோக்கியமான போட்டியா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். கம்பர் சோழ மன்னனின் ஆஸ்தான கவி. கம்பர் வாயால் தன்னையும் புகழ்ந்து பாட வேண்டும் ...