Posts

Showing posts with the label கபிலர் சொல்லிய காதல்-கலித்தொகை

கபிலர் சொல்லிய காதல்

கபிலர் சொல்லிய காதல் காதலும் வீரமும் இல்லாமல் தமிழரின் வாழ்வியலைச்  சொல்லிவிட முடியாது. வீரத்தை சொல்லும்போதும் காதல் சொல்லப்படும். காதலைச் சொல்லும்போதும் வீரம் சொல்லப்படும். இப்படி தமிழரின் வாழ்வியலில் காதலும் வீரமும் இணைந்தே தான் போய்க்கொண்டிருக்கும். காதல் வருவது ஒன்றும் இயற்கைக்கு முரணான ஒரு செயலல்ல. அனைவருக்கும் காதல் வரும். ஒரு தரப்பினர் முளையிலேயே  காதலைக் கிள்ளி எறிந்துவிட்டு தான் உண்டு. தன் வேலை உண்டு என்று பொருளீட்டும் சிந்தனையில் போய்க்கொண்டே இருப்பர். மற்றொரு தரப்பினரோ  காதலே வேலையாகச்   செய்து கொண்டிருப்பர். எந்தக் தரப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் முளைவிட்ட  காதல் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நிலைத்திருக்கும். அதனைக் காலத்தாலும்  அழித்துவிட முடியாது. அப்படியே கால வெள்ளத்தில் காணாமல் போயிருந்தாலும்  அங்கங்கே படிக்கும் சில செய்திகள், கவிதைகள் நம்மை இளமை கால நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கும். காதல் செய்வது அவரவர் விருப்பம். காதல் செய்யாதிருந்தவர்கள் அடுத்தவர் செய்யும் காதலை எட்டிப் பார்த்து மகிழ்தல் உண்டு.  காதலித்தவருக்கும் காதல் செய்யா...