மரங்களின் தாய் திம்மக்கா
திம்மக்கா "நாளிதழைத் திறந்தாலே லஞ்சம் ஊழல், கொலை, கொள்ளை, அப்பப்பா ..."சலித்தபடி செய்தித்தாளைக் கையில் கொடுத்தாள் பக்கத்து வீட்டுப்பெண் மல்லிகா. "அதை எல்லாம் தெரிவிப்பதற்குத்தானே செய்தித்தாள் ....வேறு என்ன செய்தியை எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டேன். "ஒரு நல்ல செய்தியாவது சொல்லணுமில்லையா? நாட்டில் நல்லதே நடக்கலியா? " "ஏன் நடக்கல? நாளும் நல்லது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதையும் செய்தித்தாள்கள் சொல்வதற்கு மறப்பதில்லை. உன் கண்களுக்குத்தான் அது தெரியவில்லை" "ஏன் ? நான் என்ன குருடா?" "அப்படிச்சொல்லவில்லை.நீ செய்தித்தாளைச் சரியாகப் படிக்கவில்லை என்கிறேன்" "முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம்வரை ஒன்றுவிடாமல் வாசிப்பேன்." "அப்படிப் படித்துமா நல்ல செய்திகள் கண்ணில் தெரியவில்லை?.." " பெரிய எழுத்தில் போட்டால்தானே கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். இந்த பத்திரிகைக்காரங்க நல்லகாரியத்தை பெருசா போடமாட்டேங்கிறாங்க "என்று பொங்கினாள் மல்லிகா. "ரொம்ப பொங்காத ... நீ செய்திகளைச் சரியாக பட...