Posts

Showing posts with the label சிலேடை வகைகள் - இலக்கணம்

சிலேடை வகைகள்

சிலேடை வகைகள் ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் எனப்படும். இதனை சிலேடை என்றும் கூறுவர். இந்தச் சிலேடை இரண்டு வகைப்படும். 1. செம்மொழிச் சிலேடை 2.பிரிமொழிச் சிலேடை செம்மொழிச் சிலேடை :  .ஒருசொல் பிரிக்கப்படாமல் அப்படியே தனித்து நின்று பல பொருள் தருவது செம்மொழி சிலேடை எனப்படும். " வஞ்சியேன் என்றுதன் பேரைத்தான் யானுமவன் வஞ்சியான் என்பதால் வாய்நேர்ந்தேன்- வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ"" இப்பாடலில் வந்துள்ள வஞ்சியேன் என்னும் சொல் நான் வஞ்சிமாநகரைச் சேர்ந்தவன் என்று ஒரு பொருளும் வஞ்சிக்க மாட்டேன் என்று இன்னொரு பொருளும் தரும்படி பாடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லி ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றான். அவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற நாளும் கடந்துவிட்டது.தலைவனோ இன்னும் வந்தபாடில்லை. இப்போது தலைவிக்கு ஓர் ஐயம். தலைவன் தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டானோ என அஞ்சுகிறாள். அந்த மனக்கலக்கத்தில் பிறந்ததுதான் இந்தப் பாடல். தோழியிடம் கூறுவது போல பாடல் அமைந்துள்ளது. "தோழியே , வஞ்சியேன் எ...