புறநானூறு கூறும் புலவரின் தன்மானம்
புறநானூறு கூறும் புலவரின் தன்மானம் நம் அனைவருக்கும் புலவர் என்றதும் வறுமை தான் கண்முன் வந்து நிற்கும். புலவர்கள் மன்னர்களையும் செல்வந்தர்களையும் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் வறுமையிலும் ஒரு செம்மை இருக்கும். தன்மானம் இருக்கும். நேர்மை இருக்கும். தகுதி இல்லாத எவரையும் புகழ்ந்து பாடாப் பண்பு இருக்கும். அறிவும் புலமையும் வள்ளல் தன்மையும் தகுதியும் உள்ள அரசன் என்று அறிந்தால் எவ்வளவு தொலைவானாலும் சென்று பாடி பரிசில் பெற்று வருவர். எது எப்படியோ பரிசிலுக்காகத்தானே பாட்டு என்று நினைப்பீர்கள். அப்படி நினைத்திருந்தால் உங்கள் கருத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். தன் பாடலுக்குத்தான் பரிசில் பெற்றுக் கொள்வார்களே தவிர வெறுமனே புலவர் வந்திருக்கிறார் ஏதாவது கொடுத்தனுப்புங்கள் என்று சொல்லி பொருள் கொடுத்தால் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். பெருஞ்சித்திரனார் என்ற புலவர் ஒருமுறை வெளிமான் என்ற மன்னனைக் காணச் செல்கின்றார். மன்னன் புலவர் வந்திருப்பதை அறிந்து தன் தம்பிடம் புலவருக்கு நிறைய பொருள்கொடுத்து அனுப...