Posts

Showing posts with the label உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா -மூதுரை

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா  "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்" என்று நான்கு கோடிப் பாடலைப்  பாடிய பெருமிதத்தோடு நடந்து வந்து கொண்டிருந்தார் ஔவை. அப்போது இரண்டு பேர்  வயலில் நீர்ப் பாய்ச்சுவதற்காகச் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் வேறு யாருமல்லர். உடன்பிறந்த அண்ணன் தம்பிகள்தான். அதைப் பார்த்த ஔவையின் நினைவுகளில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே துணியை மாற்றிமாற்றி உடுத்து என்று  எனக்கானது உனக்கானது  என்று எதையும் பிரித்துப் பார்க்காது வாழ்ந்த உடன்பிறப்புகள் இன்று சண்டையிட்டுக் கொள்கின்றனர். எங்கோ பிறந்தவர்கள்  நட்பு என்ற பெயரில் துன்ப காலத்தில் தோள்கொடுத்து நிற்கின்றனர். இவை எல்லாம் எதனால்? சுயநலம் பெருகும்போது உறவுகள் காணாமல் போய்விடுகின்றன. அன்பு வறண்டு போகிறது. மனித நேயமும் அன்பும் நிறைந்திருக்கும் இடத்தில் கருணை துளிர்த்தது. கண்டவர் யாவரும்  நம்மவர்களாகக் கண்ணுக்குத்  தெரிகின்றனர். காலம் செய்யும் கோலங்கள். காட்சியாய்க் கண்முன் விரிகின்றன. பாடல் நமக்கு வந்து கிடைக்கி...