உழவினார் கைம்மடங்கின் இல்லை...
உழவினார் கைம்மடங்கின் இல்லை.... உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை" குறள் : 1036 உழவினார் - உழவுத் தொழில் செய்பவர் கை - கையானது மடங்கின் - வேலை செய்யாதிருந்தால் இல்லை - இல்லாமல் போய்விடும் விழைவதூஉம் -விரும்புவதை எல்லாம் விட்டேம் - விட்டு விட்டேன் என்பார்க்கும் - என்று சொல்கின்ற துறந்தோர்க்கும் நிலை - நிலைத்து நிற்றல் உழவுத் தொழில் செய்பவர் கை மடக்கி வேலை செய்யாது இருந்துவிட்டால் அனைவரும் விரும்பி உண்ணும் உணவைத் துறந்துவிட்டோம் என்று சொல்லும் துறவிகளும்கூட தங்கள் அறச்செயல்களில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க முடியாது. விளக்கம் : உழவர் நான் உழவுத் தொழில் செய்ய மாட்டேன் என்று கைகளை மடக்கி சும்மா இருந்துவிட்டால்... யார் வயலில் இறங்கி வேலை செய்வது? பயிர்த் தொழில் முற்றிலும் முடங்கிப் போகுமே. பயிரிட ஆளில்லாவிட்டால்... எந்தப் பயிரும் விளையாது. ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் போய்விடும். உணவு இல்லாமல் யாரும் உயிர் வாழ்ந்துவிட முடியாது. உய...