கேளீர் கேளிராவரோ
கேளீர் கேளிராவரோ சில சொற்களை எழுதும்போது அப்படி இருக்குமோ இப்படியிருக்குமோ என்ற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். இறுதியில் எப்படியும் இருக்கட்டும் என்று ஏதோ ஒன்றை எழுதிவிடுவோம். இப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய சொற்கள் பல உண்டு. அதற்கான காரணம் அந்தக் குறிப்பிட்ட சொல்லுக்கான சரியான பொருளை நாம் அறியாதிருத்தலே ஆகும். அவை எந்தெந்த இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்பதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பெரும்பாலான தவறுகளைத் தவிர்க்க முடியும். சரியான சொல்லைச் சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிந்தால் பிழைபட எழுதுவதைத் தவிர்க்கலாம். வாருங்கள் அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்திய ஒருசில சொற்களும் அதன் பயன்பாடும் பற்றித் தெரிந்து கொள்வோம். 1. தருவாய்,தறுவாய் மரணத் தருவாயில் என்று எழுதுவது சரியா? மரணத் தறுவாயில் என்று எழுதுவது சரியா ? எத்துணை நேரம் தடுமாறியிருப்போம். தருவாய் என்றால் கொடுப்பாய் என்று பொருள்படும். தறுவாய் என்றால் இடம், காலம் என்ற பொருள்களில் கையாளப்படுகிறது. "புறப்படும் தறுவாயில் போய்ப் பார்க்க வேண்டும்" என்று எழுதினால் புறப்படும் நேரத்தில் என்று பொருள...