Posts

Showing posts with the label குறளும் குயிலும் -திருக்குறள் சிறுவர் கதைகள்

அழுக்காறு என ஒரு பாவி

குறளும் குயிலும் சேவற்கோழி ஒன்று வயல்வெளியில் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது. தொலைவில் பெட்டைகோழிகள் இரை தேடிக் கொண்டிருந்தன சேவலின்  தோற்றம் பெட்டையைவிட சற்று  கம்பீரமாக தெரியும்.    நான் தான் அழகு என்று சேவல் கொண்டையைக்  கொண்டையை ஆட்டும் . நாளும் ஒரு தடவையாயாவது தன் அழகைப்பற்றி  தம்பட்டம் அடிக்காவிட்டால் சேவலுக்கு  தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்.          இன்றும் அந்த பெருமையோடு   வயலைச் சுற்றி ச்சுற்றி வந்தது சேவல்.  அப்போது தொலைவில்...       "அங்கே...யாரது?  ...      நம்பவே முடியவில்லையே.   எத்தனை அழகு? ....எத்தனை  அழகு? ...   என் கண்களையே  என்னால் நம்ப முடியவில்லையே?   யாராக இருக்கும்?" மெதுவாக பக்கத்தில் போய் பார்த்து யார் என்பதைக் கண்டுவரச் சென்றது சேவல். "ஆஹா.. என்னைவிட  கொள்ளை அழகுதான்." தன்னை மறுபடியும் ஒருமுறைப் பார்த்துக் கொண்டது சேவல். "உண்மையிலேயே என்னைவிட அழகுதான்"  பொறாமை...