கோவூர் கிழாரின் மாண்பு
கோவூர் கிழாரின் மாண்பு மன்னனைவிட மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக அக்கால புலவர்கள் இருந்திருக்கிறார்கள். மன்னன் புகழ் பாடி பரிசில் பெற்றுச் செல்வது மட்டும் தங்கள் நோக்கம் அல்ல. மன்னன் தவறு செய்யும்போது இடித்துரைப்பதும் அவர்களை நல்வழிப்படுத்துவதையும் தங்கள் கடமையாக கொண்டிருந்தனர். அதியமான் ஔவை நட்பு போலவே நலங்கிள்ளிக்கும் கோவூர் கிழார் என்னும் புலவருக்கும் நல்ல நட்பு உண்டு. மன்னன் துவண்டு நிற்கும் போதெல்லாம் வந்து நின்று அறிவுரை வழங்குவார். ஆறுதல் படுத்துவார். ஒருமுறை மன்னன் நெடுங்கிள்ளி ஆவூர் கோட்டைக்குள் இருந்தபோது நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான் ஆவுரை முற்றுகை இட வருகிறார்.நெடுங்கிள்ளி தன்னுடைய கோட்டையை அடைத்துக் கொண்டு கோட்டைக்குள்ளேயே இருக்கிறார். மன்னன் மக்களைக் காக்க வேண்டிய தன் பொறுப்பை மறந்து கோட்டைக்குள் இருந்துவிட்டார் .மக்கள் உண்ண உணவும் குடிக்க நீருமின்றி பட்டினி கிடக்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட கோவூர் கிழார் மிகவும் வருந்தினார். என்ன இது? குடி காக்கும் மன்னன் செயலா இது? போரிட மனமில்லை என்றால் சரணடைந்து வி...