நோமென் நெஞ்சே நோமென்
நோமென் நெஞ்சே நோமென் உனக்கு வேணும் உனக்கு வேணும் எத்தனை முறை சொல்லியிருப்பேன் நமக்கு இது எல்லாம் வேண்டாம் என்று கேட்டாயா ? கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா ? இப்போது அழுது என்ன பயன் ? அழு...அழு நன்றாக அழு... உனக்கெல்லாம் பட்டால்தான் தெரியும் கோபமாக பேசுகிறாள் தலைவி இப்படிக் கோபப்படும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? யாரைச் பார்த்து இப்படிக் கோபப்படுகிறாள் தலைவி ? அறிய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதல்லவா ! வாருங்கள் பார்த்துவிடுவோம் தன்னை உருகி உருகிக் காதலித்த காதலன் தனியாக விட்டு விட்டுப் பிரிந்து விட்டான். இன்று வருவான் நாளை வருவான் என்று காத்திருந்து காந்திருந்து ஏமாந்து போனாள்.. அவளுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை. அழுகிறாள். யாரிடம் சொல்ல முடியும் ? அவள் பேச்சைக் கேட்காமல் தலைவன் பின்னாலேயே ஓடிய நெஞ்சின்மீது கோபம் வருகிறது. உன்னாலே .. எல்லாம் உன்னாலே.... நல்லா அழு..... எவ்வளவு கண்ணீர் விட்டு அழுதாலும் வராத காதலர் நமக்கு அமைந்திருக்கிறார். அதை நினைத்து நீ நல்லா அழு. எனக்கென்ன என்று தன் நெஞ்சோடு நொந்து கொள்கிறாள் தலைவி. பாடல் உங்க...