Posts

Showing posts from October, 2021

பேசிக்கொண்டே சாப்பிடலாமா?

பேசிக்கொண்டே சாப்பிடலாமா? "செல்போன் பேசிக்கொண்டே பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் பரோட்டா தொண்டையில் விக்கியதால் மரணம்." செய்தியை வாசித்ததும் அப்படியே அதிர்ந்து போனேன். பரோட்டா விக்கியதால் மரணமா? இப்படியும் நிகழுமா? என்னால் நம்பவே முடியவில்லை. இதில் பரோட்டா தின்றதுதான் குற்றமா? இல்லை செல்போன் பேசியபடி பரோட்டாவைத் தின்றதுதான் குற்றமா? என்று என் மனதிற்குள் ஒரு பட்டிமன்றம் ஓட ஆரம்பித்தது. செல்போன் பேசியபடி பரோட்டா தின்பதில் என்ன குற்றம்? செல்போன் பேசவில்லை என்றாலும் சாப்பாட்டுத் தட்டின்முன் அமர்ந்ததும் அனைவரும் பேசுவது இயல்புதானே! எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். செல்போன் பேசுவதற்கும் நாம் சாதாரணமாக பேசுவதற்கும் என்ன வேறுபாடு? இரண்டிலும் பேசுவது வாய்தான். பேசிக்கொண்டே வேலை செய்யவில்லையா? அது போன்றதுதானே இதுவும் என்று நினைக்கத் தோன்றும். இரண்டுக்கும் ஒற்றுமை இல்லை. இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் நடைபெறாலாம். ஆனால் ஒரே உறுப்பைக் கொண்டு இரு வேலைகள் செய்யும்போதுதான் பிரச்சினை எழுகிறது. பேசும்போது தொண்டையிலுள்ள குரல்நாண் அதிர்வலைகளை ஏற்படுத்...

வினைமுற்று

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாது அவ்வினைக்கு உரிய கருத்தாவை உணர்த்தி, எழுவாயாக நின்று, வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வருவது  வினையாலணையும் பெயர் எனப்படும். படித்ததும் ஒன்றும் விளங்காதது போல இருக்கும். மனப்பாடமாகப் படித்துவிட்டோம். இப்போது வினைமுற்று என்றால்  என்ன?என்ற கேள்வி எழுகிறது. அதனை முதலாவது பார்ப்போம். ஒரு வினைச்சொல்லானது ஒரு செயல் முடிவுற்ற நிலையில் வினைமுற்று என்று அழைக்கப்படும். மாதவன் பாடினான் . மலர் ஆடினாள். தலைவர் கொடுத்தார். கொடி அசைந்தது பறவைகள் பறந்தன. பாடினார், ஆடினாள் , கொடுத்தார்,  அசைந்தது , பறந்தன இவை யாவும் ஒரு முடிவுற்ற செயலை அதாவது வினையைக் குறிப்பிடுவதால் இவற்றை வினைமுற்று என்று அழைக்கிறோம். முடிவுற்ற வினை வினைமுற்று எனப்படும் என்பதை அப்படியே  மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வினைமுற்று என்றால் என்ன என்பது புரிந்திருக்கும். வினையாலணையும் பெயர் ஒருவினைமுற்று வினையை உணர்த்தாமல் அந்த வினையைப் செய்தவரை உணர்த்தும் அதாவது கருத்தாவை உணர்த்தும். பாடியவன் பாராட்டு பெற்றான். இதில் பாடியவன் வினையாலணையும் பெயர். பாராட்டு...

புலம்பெயர் உலகத் தமிழர் நாள்

    புலம்பெயர் உலகத் தமிழர் நாள் "பேப்பரில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறது என்று விழுந்து விழுந்து படிக்கிறீங்க" கிண்டலடித்தாள் பானுமதி. "பரிட்சைக்குப் படிப்பாங்களாக இருக்கும் "என்றாள் கோமதி. "படித்துப் பார்.என்ன எழுதியிருக்கிறது என்பது உனக்குப் புரியும்" என்றேன். "ஏன் நியூஸ் சானலில் சொல்லுவதுதானே செய்தித்தாளிலும் வருகிறது? பிறகு எதற்குச் செய்தித்தாளைப் போட்டு மாங்குமாங்குன்னு படிக்கிறீர்கள் என்று புரியவில்லை" மறுபடியும் கிண்டலடிப்பதை விடாமல் தொடர்ந்தாள் பானுமதி. "உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறது என்ன.....ஒரு தடவை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்தி வாசிப்பில் உள்ள மகிழ்ச்சி என்ன என்பது அப்போது புரியும் . இரண்டாம் வகுப்பில் தொடங்கிய செய்தி வாசிப்பு..." பெருமையாகக் கூறினேன். "இரண்டாம் வகுப்பிலிருந்தே படித்தும் இன்னும் பாஸாகலியா?...அதே இரண்டாம் வகுப்பில்தான் இன்னும் இருக்கிறீர்களா?" சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தாள் கோமதி. "நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலு...

செய்தி சொல்லும் சேதி - 3

Image
    செய்தி சொல்லும் சேதி -3 நாளிதழைத் திறந்தாலே லஞ்சம் ஊழல், கொலை, கொள்ளை, அப்பப்பா ..."சலித்தபடி செய்தித்தாளைக் கையில் கொடுத்தாள் பக்கத்து வீட்டுப்பெண் மல்லிகா. "அதை எல்லாம் தெரிவிப்பதற்குத்தானே செய்தித்தாள் ....வேறு என்ன செய்தியை எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டேன். "ஒரு நல்ல செய்தியாவது சொல்லணுமில்லையா? நாட்டில் நல்லதே நடக்கலியா? " "ஏன் நடக்கல? நாளும் நல்லது  நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதையும் செய்தித்தாள்கள் சொல்வதற்கு மறப்பதில்லை. உன்  கண்களுக்குத்தான் அது தெரியவில்லை" "ஏன் ? நான் என்ன குருடா?" " அப்படிச்சொல்லவில்லை.நீ செய்தித்தாளைச் சரியாகப் படிக்கவில்லை என்கிறேன்" "முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம்வரை ஒன்றுவிடாமல் வாசிப்பேன்." "அப்படிப் படித்துமா நல்ல செய்திகள் கண்ணில்  தெரியவில்லை?.." " பெரிய எழுத்தில் போட்டால்தானே கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். இந்த பத்திரிகைக்காரங்க நல்லகாரியத்தை பெருசா  போடமாட்டேங்கிறாங்க "என்று பொங்கினாள் மல்லிகா. "ரொ...

பகைமையும் கேண்மையும்....

பகைமையும் கேண்மையும்..... " பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் "                       குறள்.  :    709 பகைமையும் - எதிரியும் கேண்மையும் -நட்பும் கண் - விழி உரைக்கும் - சொல்லும் கண்ணின் - நோக்கினது வகைமை - வேறுபாட்டினை உணர்வார் -அறிந்து கொள்வார் பெறின்- நேர்ந்தால், பெற்றிருந்தால் கண்ணின் பார்வை வேறுபாட்டினை அறிந்து கொள்ளும் திறன் மட்டும் இருந்தால் ஒருவன் பகைவனா?நண்பனா? என்பதை அவன் கண்களே நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும் விளக்கம் : ஒரு மனிதனைப் பார்க்கும்போதே அவன் உள்ளக்கிடக்கையை அறிவிக்க வல்லது கண். கண்ணை வைத்தே ஒரு மனிதனை எடை போட்டுவிடலாம். பார்க்கும் பார்வையில் பல வகை இருக்கும். அந்த நுட்பம் எல்லோருக்கும் தெரியாது. அது தெரியாமல் போவதால்தான் பல நேரங்களில் எதிரியையும் நண்பனாக எண்ணி ஏமாந்து போகிறோம். அப்படிப்பட்ட நுட்பம் தெரிந்த அமைச்சர்களை ஒரு மன்னன் தன் அமைச்சரவையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போதுதான் எதிரியை உடனடியாக கண்டுபிடித்து தம்மையும் தன் நாட்டையும் காத்துக் கொள்ள முடியும் எ...

போலீஸ் என்றால் நம்பலாமா?

  போலீஸ் என்றால் நம்பலாமா? அதிகாலை எழும்பியதும் காபி குடிக்கிறோமோ இல்லையோ கண்கள் நாளிதழைத் தேடும். ஒருமுறை அதிகாலையிலேயே நாழிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால்... அதற்கு நாம் அடிமையாகிவிடுவோம். நாளிதழ் வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டால் கண்கள் எதையோ தேடி காத்திருக்கும். நாளிதழ் படிப்பதிலேயே நான் முந்தி ...நீ முந்தி ...என்று வீடுகளில் சண்டை ஏற்படுவதுண்டு. பத்துப் பதினைந்து நிமிடம்தான் இந்த நாளிதழ்  களேபரம். படித்து முடித்தப் பிறகு  நாளிதழ் மேசைமீது  அனாதையாகக் கிடந்து ஆடி ஆடி அழைக்கும். யாரும் சீண்டுவார்களா என அசைந்து அசைந்து எட்டிப் பார்க்கும். அசைவில் கீழே விழ பழைய பேப்பர் அடுக்குக்குமேல் கொண்டுபோய் வைக்கப்பட்டுவிடும். அத்தோடு நாழிதழுக்கும் நமக்குமான உறவு முடிந்து போயிற்று. ஆனால் செய்திக்கும் நமக்குமான தொடர்பு அத்தோடு முடிந்து போயிற்றா? முடித்துக் கொள்ளலாமா? அதற்காகவா நாளிதழ்கள் இத்தனை செய்திகளை சுமந்து வருகின்றன ? எவ்வளவு கரிசனமாக அங்கேயும் இங்கேயும் ஓடி , அல்லும்பகலும் பாராது  ஊண் உறக்கமின்றி, தேடித்தேடி செய்தி சேகரித்து, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு...

செய்தி சொல்லும் சேதி -2

  செய்தி சொல்லும் சேதி - 2 அதிகாலை 6. 30 மணி.  வாசலில் பத்திரிகை வந்து விழுகிறது.  எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஒரு இடத்தில் என் கண்கள்அப்படியே  நிலைகுத்திப் போனது.  காரணம் வாழ வேண்டிய  வயதில் இரண்டு குழந்தைகள்.  ஆயிரம் கனவுகளோடு  பதினேழு வருடம் கூடவே  வாழ்ந்த மனைவி. மூவரின் படம்.  மூவரையும் கொன்றுவிட்டு  கணவன் கடன்தொல்லையால்   தற்கொலை செய்து கொண்டார்  என்பது செய்தி.    பதினாறு வயது மகன்.  இன்னும் ஐந்தாறு வருடத்தில்  தன் காலில் நின்று விடுவான்.  பதின்மூன்று வயது மகள்.  பலபல கற்பனைகள்  வந்து கீச்சுமூச்சு காட்டும் பருவம்.  வாழ்க்கையில் பாதிகாலம்கூட  கடந்திராத மனைவி. பிள்ளைகளை  எப்படியெல்லாம் வைக்க வேண்டும்  என்று ஓராயிரம் கனவுகளோடு  இருந்தவர். கணவன்மீது உள்ள அசையா நம்பிக்கையில் ஏன் ?எதற்கு ? என்ற எந்தக் கேள்வியுமே கேட்காது  உடன் நடந்தவர். இவர்களைக் கொல்ல இவருக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி கேட்க வைக்கும் முகங்கள். தான் மட்டும் தற்கொலை செய்து ...

பிறந்தநாள் வாழ்த்து

    பிறந்தநாள் வாழ்த்து சிந்தும் சிரிப்பலையோ முந்தும்  முன்னலையோ எட்வினின் நகல்  நீயோ எட்டடி பாயும் மருள் மான்தான்  இந்தக் குட்டி ஜெஸ்வினோ? எழில் கொஞ்சும் கலையோ-எம் இல்லம் வந்த துரைதான் நீயோ அரிமா குருளை நீதானோ? புரட்டும் நாவொலி உனதோ-உன் உருட்டு மொழிதான் தமிழோ வாழ்த்தொலி கேட்டலால்  வந்ததிந்த மகிழ்வோ? வாழ்த்தும் உள்ளங்கள் வாய்த்ததுன் நற்பேறோ? உள்ளம் உவக்க  இல்லம்கூடி வாழ்த்துகிறோம்! நோய்நொடியின்றி இன்றுபோல் என்றும் மகிழ்ந்து வானும் நிலனும்போல  வாழ்வாங்கு வாழ்க....! பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழும் பரம்பரை என்னும்  நிலைத்த பெயர் கொண்டு!

செய்தி சொல்லும் சேதி

  செய்தி சொல்லும் சேதி -  1 அதிகாலை எழும்பியதும் காபி குடிக்கிறோமோ இல்லையோ கண்கள் நாளிதழைத் தேடும். ஒருமுறை அதிகாலையிலேயே நாழிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால்... அதற்கு நாம் அடிமையாகிவிடுவோம். நாளிதழ் வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டால் கண்கள் எதையோ தேடி காத்திருக்கும். நாளிதழ் படிப்பதிலேயே நான் முந்தி ...நீ முந்தி ...என்று வீடுகளில் சண்டை ஏற்படுவதுண்டு. பத்துப் பதினைந்து நிமிடம்தான் இந்த நாளிதழ்  களேபரம். படித்து முடித்தப் பிறகு  நாளிதழ் மேசைமீது  அனாதையாகக் கிடந்து ஆடி ஆடி அழைக்கும். யாரும் சீண்டுவார்களா என அசைந்து அசைந்து எட்டிப் பார்க்கும். அசைவில் கீழே விழ பழைய பேப்பர் அடுக்குக்குமேல் கொண்டுபோய் வைக்கப்பட்டுவிடும். அத்தோடு நாழிதழுக்கும் நமக்குமான உறவு முடிந்து போயிற்று. ஆனால் செய்திக்கும் நமக்குமான தொடர்பு அத்தோடு முடிந்து போயிற்றா? முடித்துக் கொள்ளலாமா? அதற்காகவா நாளிதழ்கள் இத்தனை செய்திகளை சுமந்து வருகின்றன ? எவ்வளவு கரிசனமாக அங்கேயும் இங்கேயும் ஓடி , அல்லும்பகலும் பாராது  ஊண் உறக்கமின்றி, தேடித்தேடி செய்தி சேகரித்து, தணிக்கைக்கு உட்படுத்தப...