Posts

Showing posts with the label பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க -திருமண வாழ்த்து

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

Image
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க  ஆல்போல் தழைத்து  அறுகுபோல் வேரூன்றி  மூங்கில் போல் சுற்றம் சூழப்   பதினாறும் பெற்று   பெரு வாழ்வு வாழ்க!  திருமண வீடுகளில் மணமக்களை   வாழ்த்த அனைவரும் பயன்படுத்தும்   அழகு கவிதை இது.   எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.   நாமும் நன்றாக இருக்கிறது என்று    கேட்டுவிட்டு வந்து விடுகிறோம். மறுபடியும் அதே பாட்டு இன்னொரு திருமண வீட்டில். இதுதான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது.  ஆல மரம் தெரியும். விரிந்து பரந்து கிளைகளைக் பரப்பி நிற்கும். அறுகம்புல் தெரியும் அது வெட்ட வெட்ட அறுதிப் போகாது. மறுபடியும்  மறுபடியும்  வளர்ந்து வந்து கொண்டே இருக்கும்.  மூங்கிலில் செய்த புல்லாங்குழலை   சிறுவயதில் பூ...பூ..என்று ஊதிப் பார்த்து   மற்றவர்கள் காதை செவிடாக்கி இருப்போம். மூங்கில்  வளரும் இடத்தில் சுற்றி  குத்தாக நிறைய மூங்கில்கள் வளர்ந்து வரும்.   இது என்ன பதினாறு?  அதுவும் பதினாறும் ப...