ஙப்போல் வளை
ஙப்போல் வளை ஆத்திசூடி யில் ஔவையார் "ஙப்போல் வளை." என்ற பாடல் வரியை வைத்துள்ளார். பள்ளியில் படிக்கும் போது' ங 'போல வளைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று சொல்லித் தந்த ஞாபகம். கல்லூரியில் இதற்கான இரண்டு மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டு அவை பேராசிரியரால் தெளிவாக விளக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தை என் பேராசிரியர் தான் ஏற்பதாகவும் மற்றொரு கருத்தில் தனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று கூறினார்.ஆசிரியர் கூறிய கருத்து அனைவரும் ஏற்கும் விதத்தில் இருந்தது இந்த "ஙப்போல் வளை"க்குள் இத்தனை அருமையான கருத்தும் உள்ளதா வியந்து போனேன். ஆசிரியரானதும் ஒருநாள் உரையாற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் இதனைப் பற்றி பேசினேன். ஒரு சில ஆசிரியர்கள் என் கருத்துக்கு உடன்படவில்லை. காரணம் பள்ளியில் படித்ததை அவர்கள் இன்றுவரை மறக்கவில்லை. சரியான புரிதல் இல்லாதப...