Posts

Showing posts with the label அவிழ்ந்த குடுமி -காளமேகம் பாடல்

அவிழ்ந்த குடுமி

அவிழ்ந்த குடுமி  கோபமிருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்.கோபமிருக்குமிடத்தில்தான் புலமையும் இருக்குமோ? ஔவை  கோபப்படும் போதுதான் ஆரையடா சொன்னாயடா என்று பாடி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதுபோல காளமேகப் புலவரும் கோபப்பட்டு...அட நம்ம காளமேகப் புலவரா இப்படிக் கோபப்பட்ட இருக்கிறார் என்று நம்மையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஒருமுறை காளமேகப் புலவர்  கும்பகோணத்திற்குச்  சென்றிருக்கிறார். அங்கு ஒரு திருமண வீடு. அனைவரும் உணவருந்த வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். காளமேகமும் வரிசையில் போய் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் தலையில் குடுமி வைத்த ஒரு மனிதனும்  அமர்ந்திருக்கிறார். அனைவர்க்கும் வாழையிலையில் உணவு பரிமாறப்படுகிறது.உணவின் மணம் ,பசி இரண்டையும் பார்த்ததும் வயிறு தா ...தா என்று பொறுக்க முடியாமல் கேட்க ஆரம்பித்தது. உணவை எடுத்து வாயில் வைக்கலாம் என்ற நேரம் பார்த்து  பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தவரது குடுமி   அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்தது.அவ்வளவுதான்.முடி வீழ்ந்த உணவை உண்ண மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் பசியில்...