கடந்து வந்த பாதை
கடந்து வந்த பாதை 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஓடிய கால்கள் சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கின்றன. நான் எங்கே நிற்கிறேன்? எனக்குள் எழுந்த இந்தக் கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும். எல்லோருக்குள்ளும் நான் எங்கே நிற்கிறேன் என்பதுதான் முதன்மை கேள்வியாக முன் வந்து விடை கேட்டு நிற்கும். எங்கே நிற்கிறேன் என்றால்.... ஒரே வார்த்தையில் விடை கூறிவிட முடியுமா? என்னைக் கேட்டால்.... வேறு யாரிடம் கேட்பது? நிற்கும் இடம் நிற்கும் நிலை இந்த இடத்தைப் பிடிப்பதற்காக கடந்து வந்த பாதை அனைத்தும் கண்முன் விரிகிறது. காட்சிகளாக வந்து கை குலுக்கி வாழ்த்தி நிற்கிறது. நானா...நானா இங்கே நிற்கிறேன். நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகள் நெஞ்சைத் திக்குமுக்காட வைக்கின்றன. நான் எதிர்பாராத உயரத்தில் வந்து நிற்கிறேன். இங்கிருந்து நாலாபக்கமும் பார்க்கிறேன். எவ்வளவு அழகான பாதை உடன் பயணித்த நல்ல மனிதர்கள் மறக்க முடியாத நல்ல நினைவுகளோடு இங்கே வந்து நிற்கிறேன் என்பதை நினைத்தாலே திக்குமுக்காட வைக்கிறது. மகிழ்ச்சி. இப்படித்தான் அனைவர் மனநிலையும் இருக்குமா? மாறுபட்ட ...