பொய்மையும் வாய்மை யிடத்த....
பொய்மையும் வாய்மை யிடத்த.... " பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் " குறள் : 292 பொய்மையும் _ பொய்மையும் வாய்மை _ உண்மை இடத்த _ தன்மையுடையது புரை _ குற்றம் தீர்ந்த _ நீங்கிய நன்மை _ நல்லது பயக்கும் _ பயன்தரும் எனின் _ என்றால் குற்றமற்ற நன்மையைத் தருவதாக இருந்தால் உண்மை சொல்ல வேண்டிய இடங்களில் பொய்யும் கூறலாம். விளக்கம் : பொய் சொல்லவே கூடாது என்று ஒழுக்கங்களை வலியுறுத்திச் சொல்லும் வள்ளுவர் பொய் கூறலாம் என்கிறார். தவறான கருத்தாக இருக்கிறதே என்று தோன்றலாம். "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்று வாய்மைக்கு இலக்கணம் வகுத்துத் தந்த வள்ளுவர் அடுத்த குறளிலேயே பொய்மையும் வாய்மையிடத்த என்று கூறிவிட்டார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? வள்ளுவர் புரட்டி புரட்டிப் பேசுபவர் அல்லர். விதிக்கு விதிவிலக்காக இந்தக் குறளைக் கூறி இருப்பாரோ என்று முற்றில...