கரவிலா நெஞ்சத்தவர்
கரவிலா நெஞ்சத்தவர் கரவிலா நெஞ்சத்தவர் யார்? இப்படியொரு கேள்வி வந்து மண்டையில் ஏறி உட்கார்ந்து அப்படிப்பட்ட நபரைத் தேட ஆரம்பித்தது. அந்தத் தேடலின்போது " உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கல்லாமை வேண்டும்." என்ற வள்ளலாரின் வரிகள் வந்து என்னைத் குறுக்கு விசாரணை செய்ய வைத்தது. இறைவனிடமே வரம் கேட்கும் அளவிற்கு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறவர்கள் ஆபத்தானவர்களா? ஏன் வள்ளலார் அப்படியொரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தார்.? அவர்கள் உறவு வேண்டாம் என்று விலகி ஓடும் அளவுக்கு அவர்கள் தீயவர்களா? வள்ளலாரின் வரிகள் என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அப்படியானால்... வஞ்சகர்கள் உள்ளம் ஒன்று நினைக்கும் . உதடு ஒன்று பேசும். இதைத்தான் "கண்டு ஒன்று சொல்லேல்" என்று ஔவையும் சொல்லியிருப்பாரோ? முகத்திற்கு முன்னால் புகழ்ந்தும் பின்னால் இகழ்ந்தும் பேசும் பண்பு கொண்டோரால் நிறைந்ததுதான் இவ்வுலகு. பேசினால் பேசிட்டுப் போகிறார்கள். நாம் பாட்டுக்கு நம்வழியே செல்ல வேண்டியதுதான். அவர்களால் நமக்கு என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என்கிறீர்களா? அவர்களால் எந்த நேரத்திலும் ...